‘இப்டி மோசமா தோற்றுப் போனதுக்கு’... ‘அந்த இளம் வீரர் தான் காரணம்’... ‘அவர ஏன் இன்னமும் டீம்ல வச்சிருங்கீங்க’... வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு31 ஆண்டுகளுக்குப் பிறகு கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் ஒயிட் வாஷ் படுதோல்வியால் ரசிகர்கள் ட்விட்டரில் கொந்தளித்து வருகின்றனர்.
மவுண்ட் மவுங்கனியில் இன்று நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது. ஆறுதல் வெற்றியாவது இன்று கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் இந்த தோல்விக்கு இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட சரியாக விளையாடாத விராட் கோலி, பும்ரா போன்ற சீனியர் வீரர்கள் தான் முக்கிய காரணம் என்றாலும், அவர்களை விட வெறும் மூன்று போட்டிகளில் 227 ரன்களை வாரி வழங்கிய ஷர்துல் தாகூரை, இந்திய அணியில் இனி எடுக்கவே கூடாது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
முதல் போட்டியில் 9 ஓவர்கள் வீசி 80 ரன்களை வாரி வழங்கிய ஷர்துல் தாகூர், இரண்டாவது போட்டியில் 10 ஓவர்கள் வீசி 60 ரன்களை வழங்கினார். அவரை நீக்கிவிட்டு ஷமியை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தும்கூட, அவரைத்தான் இந்திய அணி நிர்வகாம் எடுத்தது. இதையடுத்து இன்றைய போட்டியிலும், ரன் இலக்கை தடுக்க வேண்டிய கட்டாயங்களில் இருக்கும்போது, ஒரே ஓவரில் அதாவது, 47-வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை வழங்கி, 50-வது ஓவர் வரை போயிருக்க வேண்டிய போட்டியில், 46-வது ஓவரிலேயே நியூசிலாந்தின் வெற்றியை உறுதி செய்து ஷர்துல் தாகூர் தாரை வார்த்து கொடுத்ததாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
சுமார் 9.1 ஓவர் வீசி 87 ரன்களை வழங்கி, இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக ஷர்துல் தாகூர் திகழ்ந்ததாக ரசிர்கள் மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கின்றனர். ஆனால் அதேசமயம் ஷர்துல் தாகூர் சிஎஸ்கே அணியில் விளையாடியபோது மிகவும் அற்புதமாக விளையாடியதாக அந்த அணி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Shardul Thakur should never hold a cricket ball in his entire life
— 🤙🏼 (@DuddWiser) February 11, 2020
Shardul Thakur getting the treatment he deserves. I wondered how this medium pacer was not smashed in the T20i series. #NZvsIND
— 😶 (@okaySTFU007) February 11, 2020
MS Dhoni has won an IPL with same Shardul Thakur in the side.👍
Captain @imVkohli Don't blame other's.. #INDvsNZ pic.twitter.com/oOGQjEM10U
— தல ViNo MSD 3.0 🤘 (@KillerViNo007) February 11, 2020