VIDEO: அவுட்டுன்னு நெனச்சு கொண்டாட ஆரம்பிச்ச சிஎஸ்கே.. ‘ஆனா ஷர்துல் தாகூர் செஞ்ச பெரிய மிஸ்டேக்’.. கரெக்ட்டா கண்டுபிடிச்ச அம்பயர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் செய்த தவறால் ஹைதராபாத் விக்கெட் கீப்பர் சஹா அவுட்டில் இருந்து தப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

VIDEO: அவுட்டுன்னு நெனச்சு கொண்டாட ஆரம்பிச்ச சிஎஸ்கே.. ‘ஆனா ஷர்துல் தாகூர் செஞ்ச பெரிய மிஸ்டேக்’.. கரெக்ட்டா கண்டுபிடிச்ச அம்பயர்..!

ஐபிஎல் (IPL) தொடரில் 44-வது லீக் போட்டி இன்று (30.09.2021) ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை எடுத்தது.

Shardul Thakur no ball Saha escape from wicket

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் சாஹா களமிறங்கினர். இதில் ஜோஸ் ஹசில்வுட் வீசிய 4-வது ஓவரில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஜேசன் ராய் (2 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (11 ரன்கள்), பிராவோ ஓவரில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார்.

Shardul Thakur no ball Saha escape from wicket

இதனைத் தொடர்ந்து ஷர்துல் தாகூர் வீசிய 9-வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் சாஹா கேட்ச் கொடுத்தார். இதனால் அவுட் என நினைத்து சிஎஸ்கே வீரர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். உடனே சாஹாவும் பெவிலியன் திரும்பி சென்றுக்கொண்டிருந்தார்.

ஆனால் டிவி அம்பயர் பார்த்ததில், ஷர்துல் தாகூர் வீசியது நோ பால் என்பது தெரியவந்தது. அதனால் அது நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், ஜடேஜா வீசிய 13-வது ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து சாஹா (44 ரன்கள்) அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்