‘இது நடக்கும்னு 3 வருசத்துக்கு முன்னாடியே இவருக்கு எப்படி தெரியும்..?’.. திடீரென வைரலாகும் ஆர்சரின் ‘பழைய’ ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

‘இது நடக்கும்னு 3 வருசத்துக்கு முன்னாடியே இவருக்கு எப்படி தெரியும்..?’.. திடீரென வைரலாகும் ஆர்சரின் ‘பழைய’ ட்வீட்..!

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 37 ரன்களும், ரிஷப் பந்த் 30 ரன்களும் எடுத்தனர்.

Shardul Thakur broke Jofra Archer's bat video goes viral

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஜோப்ரா ஆர்சர் 4 விக்கெட்டுகளும், ஆதில் ரஷித், மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Shardul Thakur broke Jofra Archer's bat video goes viral

இதனை அடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணியைப் பொறுத்தவரை ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ராகுல் ஷகர் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Shardul Thakur broke Jofra Archer's bat video goes viral

இப்போட்டியில் ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில், 23 ரன்கள் அடித்தால் வெற்றி நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது. அப்போது அந்த ஓவரின் முதல் பந்தில் 1 ரன் மட்டும் செல்ல, அடுத்த இரண்டு பந்துகளில் பவுண்டரி, சிக்சர் விளாசி ஜோப்ரா ஆர்சர் இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதற்கு அடுத்த பந்தையும் அவர் விளாச முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக பேட் உடைந்தது. இதனால் 1 ரன் மட்டும் அவரால் எடுக்க நேர்ந்தது. இதனை அடுத்து அந்த ஓவரின் 5-வது பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஜோப்ரா ஆர்சர் அவுட்டானார்.

இந்த நிலையில்,  ‘இங்கிலாந்தில் சிறந்த பேட் ரிப்பேர் செய்பவர்கள் இருக்கிறார்களா?’ என்று நகைச்சுயாக ஜோப்ரா ஆர்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பதிவிட்ட பழைய ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்