"அவரோட ball ஃபேஸ் பண்றது ரொம்ப 'கஷ்டம்'பா... அவரு ஸ்டைலே தனி..." - 'இந்திய' பவுலரை புகழ்ந்து தள்ளிய 'வாட்சன்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தற்போது நடைபெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஷேன் வாட்சன் டி20 போட்டிகளில் தனக்கு பிடித்த 5 பந்து வீச்சாளர்கள் யார் என தெரிவித்துள்ளார்.
சென்னை அணியின் தொடக்க வீரரான வாட்சன், இந்த ஐபிஎல் தொடரில் தொடக்க போட்டிகளில் பார்முக்கு வராமல் இருந்த நிலையில், கடைசியாக நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில், டி20 போட்டிகளில் தன்னுடைய சிறந்த 5 பந்து வீச்சாளர்கள் யார் என கூறியுள்ளார்.
'எனக்கு பிடித்தமான பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் இருப்பது லாசித் மலிங்கா தான். அவர் வீசும் துல்லியமான யார்க்கர் பந்துகள், இதுவரை பார்த்திடாத ஒன்று' என்றார். மலிங்காவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணியின் ஷாஹித் அப்ரிடியை சிறந்த பந்து வீச்சாளர் என வாட்சன் கூறியுள்ளார்.
'அப்ரிடி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் தான். ஆனால், அவரது பந்து வீச்சை பார்க்கும் போது அவர் மிகச் சிறந்த டி20 பவுலர். முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றும் அப்ரிடி, அதே வேளையில் ரன்களையும் அதிகம் விட்டுக் கொடுக்க மாட்டார். அதைப் போன்று ஒரு பந்து வீச்சாளர் தான் டி20 அணிக்கு தேவை' என்றார்.
மூன்றாவதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை வாட்சன் தேர்வு செய்துள்ளார். 'பும்ராவின் பந்து வீச்சு என்பது மிகவும் தனித்துவமானது. 26 வயதில் தனது பந்து வீச்சு திறமையால் மிகப் பெரிய தாக்கத்தை டி20 போட்டிகளில் அவர் உருவாக்கியுள்ளார். மிக வேகமாக பந்து வீசும் பும்ரா, இரண்டு வகையான ஸ்விங் பந்துகளையும் வீசக் கூடியவர். பல வித்தியாசமான பந்து வீச்சு முறைகளை கொண்ட பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் சவாலான காரியம்' என தெரிவித்துள்ளார்.
பும்ராவைத் தொடர்ந்து, டுவெய்ன் பிராவோ மற்றும் சுனில் நரேன் ஆகியோரை சிறந்த டி20 பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்