“அந்த வலி என்னன்னு எனக்கு தெரியும்”.. கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜடேஜா.. முன்னாள் CSK வீரர் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகியது குறித்து ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

“அந்த வலி என்னன்னு எனக்கு தெரியும்”.. கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜடேஜா.. முன்னாள் CSK வீரர் உருக்கம்..!

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அதனால் மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ப்ளே ஆஃப் செல்வது கடினம் என சொல்லப்படுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் 8 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் இவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதனை அடுத்து மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனியிடமே ஜடேஜா ஒப்படைத்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘சிஎஸ்கே அணிக்கு ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட்டதும் நான் அதிர்ச்சியில் ஆழ்ந்தேன். ஏனென்றால் அணியிலும், களத்திலும் தோனிக்கு கிடைக்கும் மரியாதை அனைவருக்குமே தெரியும். அதனை ஜடேஜா எப்படி சமாளிக்கப் போகிறார் என எனக்கு கவலையாக இருந்தது.

ராஜஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து நானும் விலகியுள்ளேன். அழுத்தமான சூழலில் பதவி விலகுவது என்பது எப்படி வலிக்கும் என்பதை நானும் அறிவேன். இந்த முடிவை எடுத்ததற்காக ஜடேஜாவுக்கு பாராட்டு தெரிவித்தே ஆக வேண்டும். ஆனால் ஜடேஜாவால் சோபிக்க முடியாமல் போனதற்கு சில காரணங்கள் உள்ளது.

சிஎஸ்கே அணி தோனியால் உருவாக்கப்பட்டது. அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் மாற்ற முடியும். இன்னொரு சாம்பியன் கோப்பையை கூட அவரால் வெல்ல முடியும். ஆனால் அவர் உருவாக்கிய சிஎஸ்கே அணியை ஜடேஜாவால் எப்படி சமாளிக்க முடியும். இதில் தான் தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகம் தவறு செய்துவிட்டது என நான் நினைக்கிறேன்’ என்று ஷேன் வாட்சன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

CSK, MSDHONI, RAVINDRA JADEJA, IPL, SHANEWATSON

மற்ற செய்திகள்