'இதெல்லாம்' தேவையா...? 'அஸ்வின் செஞ்சது அவமானம்...' 'மோர்கனுக்கு கேள்வி கேட்க எல்லா உரிமையும் இருக்கு...' - 'வெளுத்து' வாங்கிய முன்னாள் வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அபுதாபி ஷார்ஜாவில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று (28-09-2021) ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அஸ்வின் செய்தது சரியில்லை என ஆஸ்திரேலிய முன்னாள் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

'இதெல்லாம்' தேவையா...? 'அஸ்வின் செஞ்சது அவமானம்...' 'மோர்கனுக்கு கேள்வி கேட்க எல்லா உரிமையும் இருக்கு...' - 'வெளுத்து' வாங்கிய முன்னாள் வீரர்...!

2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அபுதாபி ஷார்ஜாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிகொண்டன. இதில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் செயல் கண்டனத்திற்கும், அவமானத்திற்கும் உரியது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Shane Warne says Ravichandran Ashwin's action disgraceful

இதற்கு காரணம் பொதுவாக ஒரு வீரர் பந்தை எதிர்கொண்டு ரன் ஓடும் போது, பீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் கடைபிடிக்கப்படும் மரபாகும், விதிகளில் அவ்வாறு இல்லாவிட்டாலும் மரபாக கடைபிடிக்கப்படுகிறது.

Shane Warne says Ravichandran Ashwin's action disgraceful

ஆனால், நேற்று நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19-வது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப்பந்த் எதிர் கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி பீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப்பந்தின் உடலில் பட்டுச் சென்றது. இதைப் பார்த்த அஸ்வின் 2-வது ரன் ஓடினார்.

இந்த சம்பவம் கிரிக்கெட் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, டிம் சவுதி வீசிய 20ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் 9 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Shane Warne says Ravichandran Ashwin's action disgraceful

அந்நேரத்தில் அஸ்வின் மைதானத்தை விட்டு செல்லும் போது சவுதி அஸ்வினைப் பார்த்து ஏதோ கூறியுள்ளார். அதற்கு அஸ்வினு. ஏதோ பேச சிறிது நேரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதுள்ளது. இதனை கவனித்த கேப்டன் மோர்கன் அவருடைய பங்கிற்கு வந்து அஸ்வினுடன் வாக்குவாதம் செய்தார்.

Shane Warne says Ravichandran Ashwin's action disgraceful

இதைப் பார்த்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், நடுவர்கள் அஸ்வினை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் மைதானத்தை சில நிமிடம் சலசலப்பில் ஆழ்த்தியது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய லிஜெண்ட் ஷேன் வார்ன் அஸ்வின் 2-வது ரன் ஓடிய செயலை கடுமையாக விமர்சித்து தன் டிவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

Shane Warne says Ravichandran Ashwin's action disgraceful

அதில், 'அஸ்வினின் இந்த செயல் இதையடுத்து வரும் கிரிக்கெட் தொடர்களில் பின்பற்றப்படக் கூடாது. சுருக்கமாகச் சொல்வதென்றால், அஸ்வினின் இந்த செயல் அவமானத்திற்கு உரியது. இனி இதுபோல் நடக்கக்கூடாது.' எனத் தெரிவித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிகொண்டன. இதில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் செயல் கண்டனத்திற்கும் அவமானத்திற்கும் உரியது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Shane Warne says Ravichandran Ashwin's action disgraceful

இதற்கு காரணம் பொதுவாக ஒரு வீரர் பந்தை எதிர்கொண்டு ரன் ஓடும் போது, பீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் கடைபிடிக்கப்படும் மரபாகும், விதிகளில் அவ்வாறு இல்லாவிட்டாலும் மரபாக கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19-வது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப்பந்த் எதிர் கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி பீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப்பந்தின் உடலில் பட்டுச் சென்றது. இதைப் பார்த்த அஸ்வின் 2-வது ரன் ஓடினார்.

இந்த சம்பவம் கிரிக்கெட் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, டிம் சவுதி வீசிய 20ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் 9 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அந்நேரத்தில் அஸ்வின் மைதானத்தை விட்டு செல்லும் போது சவுதி அஸ்வினைப் பார்த்து ஏதோ கூறியுள்ளார். அதற்கு அஸ்வினு. ஏதோ பேச சிறிது நேரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதுள்ளது. இதனை கவனித்த கேப்டன் மோர்கன் அவருடைய பங்கிற்கு வந்து அஸ்வினுடன் வாக்குவாதம் செய்தார்.

இதைப் பார்த்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், நடுவர்கள் அஸ்வினை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் மைதானத்தை சில நிமிடம் சலசலப்பில் ஆழ்த்தியது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய லிஜெண்ட் ஷேன் வார்ன் அஸ்வின் 2-வது ரன் ஓடிய செயலை கடுமையாக விமர்சித்து தன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், 'அஸ்வினின் இந்த செயல் இதையடுத்து வரும் கிரிக்கெட் தொடர்களில் பின்பற்றப்படக் கூடாது. சுருக்கமாகச் சொல்வதென்றால், அஸ்வினின் இந்த செயல் அவமானத்திற்கு உரியது. இனி இதுபோல் நடக்கக்கூடாது.' எனத் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்