'ஆர்வத்துடன் வந்த கோலிக்கு’... ‘ஏத்துக்கவே முடியாமல் நடந்த விஷயம்’... 'ஆஸ்திரேலிய வர்ணனையாளர் வேதனை’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சர்ச்சையான ரன் அவுட் குறித்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர், கேப்டன் மற்றும் தற்போதைய வர்ணைனையாளருமான ஷேன் வார்னே வருத்தம் தெரிவித்துள்ளார்.

'ஆர்வத்துடன் வந்த கோலிக்கு’... ‘ஏத்துக்கவே முடியாமல் நடந்த விஷயம்’... 'ஆஸ்திரேலிய வர்ணனையாளர் வேதனை’...!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களான ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 180 பந்துகளுக்கு 74 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கோலி மற்றும் ரஹானே ஆகிய இருவரின் ஜோடி இந்திய அணிக்காக 83 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் ரஹானேவின் தவறால் விராட் கோலி ரன் அவுட் ஆகி தனது விக்கெட்டை இழந்தார்.

77-வது ஓவரின் கடைசி பந்தை மிட்-ஆஃப் திசையில் அடித்த ரஹானே ரன் ஓட முயன்றார். உடனே கோலி, ரஹானே ரன் எடுக்க ஓடி வருவதை கண்டு அவரும் ரன் எடுக்க ஓடிச் சென்றார். பந்து கோலிக்கு பின் சென்றதால் அவரால் பந்து செல்வதை பார்க்க முடியவில்லை. இதனால் அவர் ரஹானே ரன் ஓடலாம் என சொன்னதை நம்பி ஓடினார்.

ஆனால், பந்து ஹேசல்வுட் கையில் சிக்கியது. அவர் பந்தை பீல்டிங் செய்ததை பார்த்த ரஹானே ரன் ஓடாமல் பின் வாங்கினார். பாதி தூரம் ஓடி இருந்த கோலி, வேறு வழியின்றி மீண்டும் தன் இடத்துக்கு ஓடி வர முயன்றார். அதற்குள் லியோன் பந்தை பிடித்து ரன் அவுட் செய்தார். அப்போது ரஹானே களத்திலேயே, கோலியிடம் மன்னிப்பு கேட்டார். எனினும், கோலி கோபத்தில் இருந்தார்.

Shane Warne Reacts To Virat Kohli's Run-Out In Adelaide

பெவிலியன் திரும்பிய அவர் கிளவுஸை எறிந்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். கோலி ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் சதம் அடிக்கவும் வாய்ப்பு இருந்தது. ஆனால், கோலியின் ரன் அவுட்டால் இந்தியா முக்கிய விக்கெட்டை இழந்தது. விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியதால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

இதையடுத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பலர் விமர்சனங்களை எழுப்பினர். இதுபற்றி ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவானான ஷேன் வார்னே தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விராட் கோலி ரன் அவுட் முறையில் அவுட்டானது ஏமாற்றத்தை அளிக்கிறது. இன்று அவர் விளையாட சென்றபோது, ஒரு நல்ல இன்னிங்ஸ் பெறுவதை விரும்பியதுடன், அதனை பெறுவதை உறுதியாக இருந்ததை உங்களால் சொல்ல முடியும்.

ஆனால் ரன் அவுட் ஆகி இருப்பது எங்களை போன்ற கிரிக்கெட் பிரியர்களுக்கு அவமானம்’ என்று கூறியுள்ளார். விராட் கோலி இன்று சதம் அடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்திருந்தது.

மற்ற செய்திகள்