'என்னது ஸ்பாட் ஃபிக்சிங்கா?'... 'நடராஜன் மீது சேற்றை வாரி இரைத்த பிரபல வீரர்'... கடுப்பான நெட்டிசன்கள் கொடுத்த நெத்தியடி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடராஜனின் கிரிக்கெட் பயணம் வேகமெடுத்துள்ள நிலையில் அவர் மீது தேவையற்ற குற்றச்சாட்டை முன்வைத்து அனைவரின் சாடலையும் பெற்றுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன்.

'என்னது ஸ்பாட் ஃபிக்சிங்கா?'... 'நடராஜன் மீது சேற்றை வாரி இரைத்த பிரபல வீரர்'... கடுப்பான நெட்டிசன்கள் கொடுத்த நெத்தியடி!

பார்டர் - காவஸ்கர் கோப்பையின் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் அனுபவ வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ளதால் நடராஜன், சர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுக வீரராக களமிறங்கினார்கள்.

அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே 3 பேரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றனர். நடராஜன் பந்துவீச்சு என்னை மிகவும் கவர்ந்துள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீர் கான் அவரை புகழ்ந்திருந்தார்.

இதனிடையே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் காபா டெஸ்ட் போட்டியில் நடராஜன் வீசிய நோ பால் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

நடராஜன் முதல் இன்னிங்சில் 6 நோ பால்களும் நான்காவது நாளான இன்று ஒரு நோ பாலும் வீசி உள்ளார்.

இது குறித்து ஷேன் வார்ன் கூறுகையில், "காபா டெஸ்ட் போட்டியில் நடராஜன் வீசிய நோ பால்களில், சுவாராஸ்யமான ஒன்று தான் என் கண்ணில் பட்டுள்ளது. நடராஜன் இந்த டெஸ்ட் போட்டியில் 7 நோ-பால்களை வீசி உள்ளார். அது எல்லாம் பெரிதான ஒன்று. அந்த நோ பால்களில் ஐந்து அவர் வீசிய முதல் பந்து. அவை அனைத்து கிரிஸை விட்டு மிகவும் தள்ளி போடப்பட்டது. நாங்கள் அனைவரும் கூட நோ பால் வீசியுள்ளோம். ஆனால் குறிப்பாக முதல் பந்து நோ பாலாக வீசுவது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான்" என்றுள்ளார்.

ஷேன் வார்னின் இந்த கருத்து நடராஜன் ஸ்பாட் ஃபிக்சிங்சில் ஈடுபட்டார் என்பதை குறிப்பது போல் அமைந்தது. அவர் நேரிடையாக சொல்லவில்லை என்றாலும் அவரின் கருத்து மறைமுகமாக நடராஜனை தாக்குவது போல் அமைந்தது.

ஷேன் வார்ன் கருத்தால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ட்விட்டரில் அவரை வெகுவாக சாடி வருகின்றனர்.

 

 

 

 

 

 

காபா டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சீக்கிரமாக முடிக்கப்பட்டது. நாளை ஒரு நாளே எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற 324 ரன்கள் தேவைப்டுகிறது.

மேலும் மழையின் குறுக்கீடு உள்ளதால் போட்டி டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புகள் உள்ளது. அதே சமயம் ஆஸ்திரேலிய பந்துவீச்சையும் எளிதில் எடுத்து கொள்ளமால் இருக்க முடியாது. இந்திய அணியின் பொறுப்பான ஆட்டத்திலேயே போட்டியின் முடிவு உள்ளது.

 

மற்ற செய்திகள்