எப்பேற்பட்ட டீம், அவங்களையே தோக்கடிச்சிட்டாங்க.. இந்த தடவை நிச்சயம் ‘கப்’ அவங்களுக்குதான்.. அடிச்சி கூறும் முன்னாள் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள அணி குறித்து ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை (T20 World Cup 2021) தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தையும் வீழ்த்தி நியூஸிலாந்து அணியும், இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டி இன்று (14.11.2021) துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதுவரை இந்த இரு அணிகளும் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியதில்லை. அதனால் இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, தங்களது முதல் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே எந்த அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் (Shane Warne) தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ‘இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. அப்படிப்பட்ட அணியை அரையிறுதியில் ஆஸ்திரேலியா தோற்கடித்துள்ளது. இதை வைத்து பார்க்கும்போது ஆஸ்திரேலியாவே டி20 உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
டி20 கிரிக்கெட் தொடர்களில் ஆஸ்திரேலியா பல சரிவுகளை சந்தித்து இருந்தாலும், டி20 உலகக்கோப்பை தொடரில் அற்புதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. அதேபோல் தற்போது ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் அனைத்து வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். அதனால் நிச்சயம் ஆஸ்திரேலியாதான் சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்லும்’ என ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்