"மனைவிக்கு மாதந்தோறும் ரூ.50,000 கொடுக்க வேண்டும்".. முகமது ஷமிக்கு நீதிமன்றம் உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தனது மனைவிக்கு மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு செலவுக்காக கொடுக்கவேண்டும் என கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலராக வலம் வருபவர் முகமது ஷமி. இவர் சமீபத்தில் நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடி இருந்தார். திருமணமாகிய நிலையில் ஷமிக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஷமி மீது அவருடைய மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துவந்தார். இதனை ஷமி மறுத்தும் வந்தார். இதனிடையே, கடந்த 2018 ஆம் ஆண்டு ஷமி மீது அவருடைய மனைவி ஹசின் ஜஹான் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
Images are subject to © copyright to their respective owners.
முகமது ஷமி - ஹாசின் ஜஹான் விவகாரத்து கோரிய வழக்கு கொல்கத்தா குடும்பநல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. 2018 ஆம் தொடரப்பட்ட இந்த வழக்கில் ஹாசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு ரூ.7 லட்சமும், மகளின் பராமரிப்புக்காக ரூ.3 லட்சமும் வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது. அதில் ஷமி மாதந்தோறும் 1.30 லட்ச ரூபாயை தனது மனைவிக்கு கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் மனைவிக்கான ஜீவனாம்சமாக 50 ஆயிரம் ரூபாயும் அவருடன் வசித்துவரும் மகளின் பராமரிப்பு செலவுகளுக்காக 80 ஆயிரம் ரூபாயும் அடங்கும்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தனக்கு சாதகமாக இருப்பதாகவும், ஆனாலும் ஷமியின் ஆண்டு வருமானம் அதிகம் என்பதால் உயர்நீதிமன்றத்தினை நாட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் ஹசின் ஜஹான். 2020-21 நிதியாண்டிற்கான முகமது ஷமியின் வருமான வரிக் கணக்கின்படி, அவரது ஆண்டு வருமானம் 7 கோடிக்கு அதிகமாக இருப்பதாகவும் அதன் காரணமாக ஜீவானாம்ச தொகையை 10 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும் ஹசின் ஜஹானின் வழக்கறிஞர் மிருகங்கா மிஸ்திரி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
மேலும், ஷமிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவில் தனது மனைவி மற்றும் மகளுக்கு கொடுக்க வேண்டிய தொகையை ஆங்கில தேதி 10-க்குள் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஷமி தனது மகளுக்கு 80 ஆயிரம் ரூபாயை அளித்துவருவதாகவும் இந்த தொகையை அதிகரிக்க வேண்டும் என வைக்கப்பட்டுள்ள கோரிக்கை நியாயமானது அல்ல என்றும் ஷமியுடைய வழக்கறிஞர் செலிம் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்