‘அசுர வேகத்தில் வந்த பந்து! சிதறிய ஸ்டெம்புகள் அதிர்ச்சியடைந்த வங்கதேச வீரர்’.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்கவுள்ள நிலையில் கடந்த 24 ஆம் தேதி முதல் பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், நேற்று (28/05/2019) நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில், இந்திய அணி 95 ரன்கள் வித்யாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
இந்நிலையில், இந்த போட்டியில் வங்கதேச வீரர் ஷகிப் அல் உசேன் கிளின் தான் சந்தித்த முதல் பந்திலேயே பும்ரா வீசிய யாக்கரில் கிளீன் போல்ட் ஆனார். இதில், அசுர வேகத்தில் பும்ரா வீசிய யாக்கரை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய போது பந்து பின்னால் இருந்த ஸ்டெம்புகளை தாக்கியது.
இதையடுத்து, ஷகிப் அல் உசேன் ரன் எதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இந்நிலையில், பும்ரா வீசிய யாக்கர் விடியோ ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
What a delivery this was 👌
Jasprit Bumrah bowling Shakib Al Hasan with the perfect yorker first ball!
WATCH ⬇️ https://t.co/Uq6c7a2odF
— Cricket World Cup (@cricketworldcup) May 28, 2019