கொஞ்சமாவது 'அறிவுள்ள' நாடுன்னா தயவு செஞ்சு 'இந்தியாவ' Follow பண்ணாதீங்க...! எங்களுக்கும் கௌரவம், 'பெருமை'லாம் இருக்கு...! - விட்டு விளாசி தள்ளிய முன்னாள் வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லையென கூறி நியூசிலாந்து அணி கிரிக்கெட் தொடர் விளையாடமல் சென்ற சம்பவத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இந்தியாவை கடுமையாக சாடியுள்ளார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகள் விளையாட நியூசிலாந்து அணி கடந்த சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தான் வந்தடைந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் வந்து சேர்ந்த சில நாட்களில் நியூசிலாந்து அணி வீரர்களின் உயிருக்கு அச்சுறுதல் எழுந்தது. அதைத்தொடர்ந்து கடைசி நேரத்தில், நியூசிலாந்து அணி பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி நாடு திரும்பியது. இதனால் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. மேலும், பாகிஸ்தானுக்கு பண சிக்கலும் ஏற்பட்டது.
இந்த நிகழ்வு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரீடி கூறும் போது, 'பொதுவாக ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது என்றால், பயண ஏற்பாடுகள் குறித்து துருவித் துருவி ஆராய்வார்கள்.
பயணம் செய்யும் அணியின் நாடு பாதுகாப்பு உத்தரவாதங்களை சரிபார்த்த பின்னரே அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள பச்சைக் கொடி காட்டப்படும். பாகிஸ்தான் மக்கள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களை நேசிப்பார்கள். ஆனால் நியூசிலாந்து அணி செய்தது மிகப் பெரிய தவறு.
முதலில் நியூசிலாந்து அணிக்கு அச்சுறுத்தல் இருந்தால் அதை அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருக்க வேண்டும். அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சூழ்நிலையை மதிப்பீடு செய்ய அனுமதித்து பிறகு முடிவெடுத்திருக்க வேண்டும்.
ஆனால், ஒன்றும் தெரிவிக்காமல் நியூசிலாந்து இந்த முடிவை எடுத்துள்ளது. நாங்களும் நாடுதான் எங்களுக்கும் கவுரவம், பெருமை எல்லாம் உண்டு. ஒரு நாடு இப்படி செய்தது என்று எண்ணிக்கொண்டு மற்ற நாடுகளும் பாகிஸ்தான் வருவதை மறுபரிசீலனை செய்து வருவது சரியல்ல.
மற்ற நாடுகள் குறிப்பாக கல்வியறிவு உள்ள நாடுகள் இந்தியாவைப் பின்பற்றக் கூடாது. பாகிஸ்தானை விட இந்தியாவில் சூழ்நிலை மோசமாக உள்ளது. எங்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை. ஆனால், கிரிக்கெட் வாரியத்தின் கட்டாயத்தால் நாங்கள் இந்தியா சென்றோம்.
கொரோனா சூழ்நிலைகளில் இங்கிலாந்துக்கு சென்றோம். ஆனால், நியூசிலாந்து அணியோ பொய்யான மின்னஞ்சல்களைக் கண்டு அஞ்சி தொடரை ரத்து செய்தது முறையல்ல' என அப்ரீடி கடுமையாக கூறியுள்ளார்.
அவர் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா பாகிஸ்தான் தொடரை நியூசிலாந்து ரத்து செய்ததற்கு, 'இதே பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என தொடரிலிருந்து விலகுவார்களா, மாட்டார்கள் எல்லாத்திற்கும் பணம் தான் காரணம்' எனக் கூறியுள்ளார்.
நியூசிலாந்து நாட்டை தொடர்ந்து இங்கிலாந்தும் பாகிஸ்தான் வருகையை ரத்து செய்தது. மேலும், ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள் என்று பாகிஸ்தான் தொடரை மறுபரிசீலனை செய்யத் தொடங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்