"'பேட்டிங்' எறங்குறப்போ இப்டி தான் வருவீங்களா??..." 'அப்ரிடி' செய்த அந்த 'செயல்'... வறுத்தெடுத்த 'நெட்டிசன்'கள்,.. சர்ச்சை 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரை போல பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஷாஹித் அப்ரிடி அணிந்திருந்த ஹெல்மெட் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

"'பேட்டிங்' எறங்குறப்போ இப்டி தான் வருவீங்களா??..." 'அப்ரிடி' செய்த அந்த 'செயல்'... வறுத்தெடுத்த 'நெட்டிசன்'கள்,.. சர்ச்சை 'சம்பவம்'!!!

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட ஷாஹித் அப்ரிடி, டி 20 தொடர்களில் விளையாடி வருகிறார். இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் முல்தான் சுல்தான் அணிக்காக அப்ரிடி ஆடி வருகிறார்.

இந்த தொடரின் பிளே ஆஃப் சுற்றில் கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பேட்டிங் இறங்கிய ஷாஹித் அப்ரிடி அணிந்திருந்த ஹெல்மெட் கடும் விவாதப் பொருளாகியுள்ளது. காரணம், அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டின் முன் பக்கமுள்ள கம்பிகளின் முதல் வரிசை நீக்கப்பட்டு இருந்தது.

பேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டின் முன்பக்கம் கம்பிகள் இருப்பது பந்துகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளத் தான். ஆனால், அந்த பகுதி இல்லாமலே ஷாஹித் அப்ரிடி களமிறங்கியுள்ளார். அப்ரிடியின் இந்த செயலை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக கிண்டல் மற்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், சிலர் இந்த செயல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் எச்சரித்து வருகின்றனர். 

 

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஜ்ஸ், பவுன்சர் பந்து தாக்கி உயிரிழந்திருந்தார். இது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதே போல, சமீபத்திய ஐபிஎல் தொடரிலும் ஹைதராபாத் வீரர் விஜய் சங்கர் மீது ஃபீல்டர் வீசிய பந்து அவரது கழுத்து பகுதியில் தாக்கியது. 

 

அப்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், பேட்ஸ்மேன்களுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட வேண்டும் என கோரிக்கையை ஐசிசியிடம் முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

மற்ற செய்திகள்