"கிரிக்கெட் ஆடுறப்போ இந்த விஷயத்த 'முதல்'ல கத்துக்கோங்க..." 'போட்டி'யின் போது கடுப்பான 'அப்ரிடி'... அதன் பின்னர் அளித்த 'விளக்கம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் லங்கன் பிரீமியர் லீக் போட்டி தொடரில் கல்லீ கிளாடியேட்டர்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதிய போது நிகழ்ந்த சண்டை கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

"கிரிக்கெட் ஆடுறப்போ இந்த விஷயத்த 'முதல்'ல கத்துக்கோங்க..." 'போட்டி'யின் போது கடுப்பான 'அப்ரிடி'... அதன் பின்னர் அளித்த 'விளக்கம்'!!!

இந்த போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், போட்டி முடியும் தருவாயில் இருந்த போது கல்லீ கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வீரர் முகமது அமீருக்கும், கண்டி டஸ்கர்ஸ் அணியில் இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான நவீன் உல் ஹக்கிற்கும் இடையே மோதல் நடைபெற்றது.

களத்தில் இருந்த வீரர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனாலும், அதனைத் தாண்டி இருவரும் சில வார்த்தைகளை பேசியதாக தெரிகிறது. இந்த சண்டை தொடர்பாக, போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களும் கை குலுக்கிய போது, கல்லீ கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வீரர் அப்ரிடி, இளம் வீரரான நவீன் உல் ஹக்கை கண்டித்துள்ளார்.

அப்போது அப்ரிடி, 'நீ பிறப்பதற்கு முன்பே நான் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தவன்' என கூறியதாக தகவல்கள் வெளியானது. மிகவும் சர்ச்சையான இந்த சம்பவத்திற்கு பின்னர் அப்ரிடி ஒரு ட்வீட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'இளம் வீரர்களுக்கு எனது அறிவுரை எளிதானது தான். தவறான பேச்சில் ஈடுபடாமல் விளையாட்டை ஆடுங்கள். ஆப்கானிஸ்தான் அணியில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். எங்களிடையே நல்லுறவு உள்ளது. அணி வீரர்கள் மற்றும் எதிரணி வீரர்களை மதிப்பது தான் கிரிக்கெட் போட்டியின் அடிப்படை' என குறிப்பிட்டுள்ளார். 

 

இதனை பகிர்ந்த முகமது அமீர், 'நீங்கள் சொன்னது 100 சதவீதம் சரி' என குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவுகள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்