"சிக்ஸர் பறந்ததுக்கா இப்டி?".. முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரிடம் திடீர்ன்னு வாக்குவாதம் செய்த பாகிஸ்தான் வீரர்.. அதிர்ச்சியை உண்டு பண்ணிய வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவது போல, பாகிஸ்தானிலும் டி 20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. PSL என அறியப்படும் இந்த தொடரில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட பல அணிகளில் உள்ள வீரர்கள் ஆடி வருகின்றனர்.

"சிக்ஸர் பறந்ததுக்கா இப்டி?".. முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரிடம் திடீர்ன்னு வாக்குவாதம் செய்த பாகிஸ்தான் வீரர்.. அதிர்ச்சியை உண்டு பண்ணிய வீடியோ!!

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | "மீண்டும் மீண்டுமா?".. சிவனேன்னு இருந்த வாகனை ஜாலியா சீண்டிய வாசிம் ஜாஃபர்.. வைரல் ட்வீட்!!

மேலும் இந்த ஆண்டுக்கான தொடர், தற்போது பாகிஸ்தானில் வைத்து நடைபெற்று வருகிறது. அனைத்து போட்டிகளுமே மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் பிஎஸ்எல் தொடருக்கு உலக அளவில் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் இரு வீரர்கள் மோதிக்கொண்டது தொடர்பான வீடியோ தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PSL தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கொலாண்டர்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி சிறப்பாக ஆடி 160 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரர் கேரன் பொல்லார்ட், அதிரடியாக அடி 34 பந்துகளில் சிக்சர்களுடன் 57 ரன்கள் சேர்த்திருந்தார். இதனால் முல்தான் சுல்தான்ஸ் அணி சிறப்பான ரன்னை எட்ட தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிருந்த லாகூர் அணி, முல்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 76 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த வெற்றியின் மூலம் முல்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. மறுபக்கம் லாகூர் அணி, இரண்டாவது எலிமினேட்டர் போட்டி விளையாடும் சூழலும் உருவாகியுள்ளது. இதனிடையே இந்த போட்டியில் தான் பொல்லார்ட் மற்றும் லாகூர் அணியை சேர்ந்த சாஹீன் அப்ரிடி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். சாஹீன் அப்ரிடி வீசிய 19 வது ஓவரில் மூன்று சிக்ஸர்களை பொல்லார்ட் பறக்க விட்டிருந்தார். இதன் காரணமாக அப்ரிடி சற்று விரக்தி அடைய, அதன் பெயரில் அவர்கள் இருவரும் மாறி மாறி வாக்குகளை கோபத்துடன் பரிமாறி கொண்டனர். இது தொடர்பான வீடியோ, தற்போது கிரிக்கெட் ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

Also Read | "தமிழ்நாட்டோட பெருமை".. ரவிச்சந்திரன் அஸ்வினை பாராட்டிய உதயநிதி.. வைரலாகும் ட்வீட்!!

CRICKET, SHAHEEN AFRIDI, POLLARD, PSL MATCH

மற்ற செய்திகள்