‘வின்னிங் விக்கெட்’.. ‘மொத போட்டியே மெர்சல் பண்ணீட்டீங்க’.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்களை எடுத்தது. இதில் ரோஹித் ஷர்மா இரட்டை சதம் (212), ரஹானே சதம் (115), ஜடேஜா அரைசதம் (51) அடித்து அசத்தினர்.இதனை அடுத்து தனது முதல் இன்னிங்ஸ்ஸில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய இரண்டாது இன்னிங்ஸ்ஸிலும் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்க அணி இழந்தது. இதனால் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதில் முகமது ஷமி 3 விக்கெட்டுகள், உமேஷ் யாதவ் மற்றும் நதீம் தலா 2 விக்கெட்டுகள், சுழற்பந்து வீச்சாளர்களான ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இப்போட்டியின் 48 -வது ஓவரை இந்திய அணியின் அறிமுக வீரர் நதீம் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி அதனை ஸ்ட்ரெய்ட் ஷாட்டாக அடித்தார். அப்போது எதிர் முனையில் இருந்த ஆண்ட்ரிச் மீது பட்டு பந்து ப்பவுன்ஸ் ஆனது. உடனே நதீம் பந்தை கேட்ச் பிடித்து தென் ஆப்பிரிக்க அணியின் கடைசி விக்கெட்டை கைப்பற்றினார்.
— Utkarsh Bhatla (@UtkarshBhatla) October 22, 2019