VIDEO: 'தோனி கிட்ட இருந்த அதே ஃபயர்'!.. ரசிகர்களை வாயடைக்க வைத்த... இந்திய அணியின் சிங்கப் பெண்!.. யார் இந்த ஷபாலி வர்மா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் தோனியின் ஸ்டைலை பின்பற்றி இந்திய வீராங்கனை ஷாபாலி வர்மா ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தார்.

VIDEO: 'தோனி கிட்ட இருந்த அதே ஃபயர்'!.. ரசிகர்களை வாயடைக்க வைத்த... இந்திய அணியின் சிங்கப் பெண்!.. யார் இந்த ஷபாலி வர்மா?

இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடரில் இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சூழலில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியையும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி பறிகொடுத்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து மகளிர் அணி வென்றது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், இளம் வீராங்கனை ஷபாலி வர்மா செய்த விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

மேட்ச்சின் 17வது ஓவரில் எக்லஸ்டோன் வீசிய பந்தை ஷபாலி வர்மா இறங்கி ஆட நினைத்தார். ஆனால், பந்தை சரியாக கணிக்காததால் பேட்டில் கூட படாமல் கீப்பரின் கைகளுக்கு சென்றது. ஸ்டம்பிக் செய்ய விக்கெட் கீப்பர் எமி ஜோன்ஸ் முயற்சிக்க, சாதூர்யமாக செயல்பட்ட ஷாபாலி, தனது கால்களை நன்கு அகலப்படுத்தி கிரீஸுக்குள் சென்றார். எனினும், ஷபாலியின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. 44 ரன்களுக்கு ஸ்டம்ப் அவுட்டாகி வெளியேறினார். 

இதே போன்ற முயற்சியை எம்.எஸ்.தோனி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் செய்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் ஆடம் சாம்பா வீசிய பந்தை தோனி இறங்கி ஆட முற்பட்டார். ஆனால், அது கீப்பரின் கைகளுக்கு செல்ல, உடனடியாக தோனி இரு கால்களையும் அகலப்படுத்தி விக்கெட்டில் இருந்து தப்பினார். அப்போது அவர் 2.14 மீ அளவிற்கு தனது கால்களை விரித்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

தோனி - ஷபாலி வர்மா இருவரின் முயற்சியையும் புகைப்படம் மூலம் ஒப்பிட்டு தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 17 வயதாகும் ஷபாலி வர்மா தோனியை போலவே அதிரடி காட்டி வருகிறார் என்ற பேச்சுக்கள் ஏற்கனவே எழுந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

மற்ற செய்திகள்