"கேப்டன் பதவி இல்லையா...? இந்த நேரத்துல 'இவரை' பார்த்துக் கத்துக்கணும்"- கோலிக்கு முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனின் ‘ஹின்ட்'..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிக்க, அடுத்த கேப்டன் ஆக தலைமைதாங்க தயாராகி உள்ளார் ரோகித் சர்மா. அடுத்து வருகிற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மாதான் இந்திய அணியை தலைமை ஏற்று நடத்த உள்ளார்.

"கேப்டன் பதவி இல்லையா...? இந்த நேரத்துல 'இவரை' பார்த்துக் கத்துக்கணும்"- கோலிக்கு முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனின் ‘ஹின்ட்'..!

கேப்டன் பதவி இல்லாத சூழலில் அணியில் விராட் கோலி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டி உள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஆன வீரேந்திர சேவாக். கோலி அடுத்ததாக தன்னுடைய டி20 போட்டிகளின் போது அணியில் ‘சச்சின் டெண்டுகர்’ போல் நடந்து கொண்டு புதிய திறன்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சேவாக்.

Sehwag urged Kohli to follow the footsteps of Sachin Tendulkar

இதுகுறித்து சேவாக் கூறுகையில், “கோலி இன்று இருக்கும் ஒரு நிலையில் அன்று சச்சின் டெண்டுல்கரும் இருந்தார். கேப்டன் ஆக இருந்த சச்சின் தனது பதவியில் இருந்து விலகிய பின்னர் மூன்று பெரும் கேப்டன்களின் கீழ் விளையாடினார். சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் எம்.எஸ்.தோனி ஆகிய மூன்று கேப்டன்களும் தங்களது தலைமை தாங்கும் திறனுக்காக பிரபலம் அடைந்தவர்கள். தான் கேப்டனாக இல்லாவிட்டாலும் தன்னுடைய அனுபவங்களை எல்லாம் தொடர்ந்து தனக்கு அடுத்து வந்த கேப்டன்களுக்கு சொல்லிக் கொடுப்பார் சச்சின்.

Sehwag urged Kohli to follow the footsteps of Sachin Tendulkar

என்னைப் பொறுத்தவரையில் இந்த நேரத்தில் கோலி, சச்சின் வழியைத்தான் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவேன். அனுபவத்தை புது கேப்டனுக்கு வழங்குலாம். ஆனால், அவற்றை எல்லாம் செயல்படுத்தும் திறன் அந்தப் புது கேப்டனின் பொறுப்பு. இதற்கு முன்னர் கூட கோலி தானும் ரோகித்தும் சிறந்த தலைவர்கள் என்றும் எப்போதும் இந்திய அணியின் நலனுக்காக இளம் வீரர்களின் திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிப்போம் என்றும் கூறியிருந்தார். அதைப் போலவே அவர் செயல்பட வேண்டும் என நினைக்கிறேன்.

Sehwag urged Kohli to follow the footsteps of Sachin Tendulkar

மேலும், ஒவ்வொரு கேப்டனும் அடுத்ததாக துணை கேப்டனை மெருகேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அணியின் பலம் நிலைத்து இருக்கும். கடந்த 2007-ம் ஆண்டு தோனி கேப்டன் ஆக அணியை வழி நடத்திய போது எனக்கு துணை கேப்டன் பதவியை வழங்கினார்கள். ஆனால், அணி நிர்வகத்திடன் ஒரு இளம் வீரரை துணை கேப்டன் ஆக நியமிக்கும்படி நான் கேட்டுக் கொண்டேன். காரணம், அப்போதுதான் அந்த இளம் வீரர் வளர்ந்து அடுத்த கேப்டன் ஆக தனது அணியை வழிநடத்த முடியும். அன்று, எனது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இன்று, கோலி இளம் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது இந்திய கிரிக்கெட் அணியின் வருங்காலத்துக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்” எனப் பேசியுள்ளார்.

VIRATKOHLI, BCCI, ROHIT SHARMA, SACHIN TENDULKAR, SEHWAG

மற்ற செய்திகள்