'தோனி கேப்டனா இருக்குறப்போ...' அஸ்வினை 'அப்படி'லாம் பண்ண 'பெர்மிசன்' கொடுக்கவே மாட்டாரு...! - முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அஸ்வின் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார்,

'தோனி கேப்டனா இருக்குறப்போ...' அஸ்வினை 'அப்படி'லாம் பண்ண 'பெர்மிசன்' கொடுக்கவே மாட்டாரு...! - முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து...!

ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு மாதிரியாக வீச நினைத்து வீசினார். தோனி இதனை எப்போதும் அனுமதிக்க மாட்டார் என்று அஸ்வினின் பரிசோதனைகளை முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.

Sehwag says Dhoni will never allow experiment bowling on ashwin

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது லெக் ஸ்பின், கேரம் பந்து, தூஸ்ரா என்று ஒவ்வொரு பந்தையும் புது விதமாக வீசினார். வைட் ஆப் த கிரீசிலிருந்தும், ஸ்டம்புக்கு பக்கத்தில் இருந்தும் மாற்றி மாற்றி பந்தை வீசினார் அஸ்வின். ஆனால், எங்கு ஆஃப் ஸ்பின் வீசினால் பந்தை அடித்து கிழித்து விடுவார்களோ என்ற பயம்தான் அவரது பலத்திலிருந்தே அவரை விலக்கியுள்ளது என சேவாக் கூறியுள்ளார்.

Sehwag says Dhoni will never allow experiment bowling on ashwin

இப்படி பரிசோதனை முயற்சிகளை செய்வதால் விக்கெட் எடுக்கும் வாய்ப்புகளை அஸ்வின் இழக்க நேரிடுகிறது என தெரிவித்துள்ளார். ஆஃப் ஸ்பின் போட்டுக்கொண்டே பரிசோதனை பந்துகளை திடீரென்று எதிர்பாராதவிதமாக வீசி விக்கெட் எடுக்கும் ஆற்றல் கொண்டவர்தான் அஸ்வின். ஒரு பொறுப்புணர்வு உள்ள கேப்டன் பரிசோதனை பந்து வீசுவதை அனுமதிக்க மாட்டார். அந்த விதத்தில் தோனி ஒரு ஆளுமையுள்ள கேப்டன் என சேவாக் கூறியுள்ளார்.

Sehwag says Dhoni will never allow experiment bowling on ashwin

இந்த நிலையில் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பெட்டியில் சேவாக் கூறியதாவது, "ஆஃப் ஸ்பின் போட்டால் அடித்து துவம்சம் செய்து விடுவார்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் நினைக்கலாம். அதனால் தான் அவர் பரிசோதனை முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்கிறார். எம்.எஸ்.தோனி விக்கெட் கீப்பராக இருந்த போது அஸ்வினை ஒருபோதும் பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதிக்கமாட்டார்.

Sehwag says Dhoni will never allow experiment bowling on ashwin

அவர் வீசும் விதம் பேட்டிங் செய்பவரை விக்கெட் எடுக்கும் வாய்ப்புக் குறைவுதான். ஆனாலும், ஆஃப் ஸ்பின் வீசினால் எல்பி, பவுல்டு ஆக வாய்ப்பு அதிகம். இதேப் போன்று பரிசோதனைப் பந்துகளை வீசும்போது அந்த வாய்ப்பு மிகவும் குறைகிறது. ஒரு சீனியர் பவுலராக மிடில் ஓவர்களில் அதிக விக்கெடுகளை எடுத்துத் தர வேண்டியது அவரது பொறுப்பு" என சேவாக் கூறியுள்ளார்

மற்ற செய்திகள்