நான் சொன்ன ரெண்டு டீம்ல 'ஒண்ணு' தான் 'கப்' அடிக்க போறாங்க...! 'மத்தவங்களுக்கெல்லாம் இந்த தடவ சான்ஸ் இல்ல...' - உறுதியாக சொல்லும் ஷேவாக்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2021-ஆம் ஆண்டுக்கான ஐபில் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (19-09-2021) ஐக்கிய அரபு எமிரேட்சில் (UAE) மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக 14-வது ஐபில் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. ஐபில் ரசிகர்களோ மீண்டும் ஐபில் ஆட்டம் தொடருமா இல்லையா என்ற சந்தேகத்தில் இருந்த நிலையில் ஐ.சி.சி இரண்டாம்கட்ட தொடரின் தேதியை அறிவித்தது.
அதன்படி, இன்று 4 மாதங்களுக்கு பிறகு துபாயில் ஐ.பி.எல். போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் மாலை ஆரம்பித்தது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகிறது.
இந்நிலையில், முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் எந்த அணி ஐபில் கோப்பையை வெல்லும் என்று கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
அதில், 'கொரோனா பரவலுக்கு பின் நடத்தப்படும் இந்த ஐபில் தொடர்கள் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் டெல்லி, மும்பை அணிகளுக்கு அதிக வாய்ப்பினை வழங்கும் என நான் நினைக்கிறேன்.
ஐபில் தொடர்களில் அதிக தொடரை வென்றவர்கள் மும்பை இந்தியன்ஸ். அதேபோல் இந்த முறையும் மும்பை இந்தியன்ஸ் தான் ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற கூடுதலான வாய்ப்பு இருக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஆடுகளங்களை பொறுத்தவரையில், ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும். இது சென்னை மற்றும் பெங்களூரூ அணிகளுக்கு கடுமையான சிக்கல் ஏற்படுத்தும்.
கொரோனா பரவலுக்கு முன் நடத்தப்பட்ட ஐபில் முதற்கட்ட ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சராசரி ஸ்கோர் 201. அதுமட்டுமல்லாமல் தற்போதைய சென்னை அணியில் அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறையாகவே இருக்கிறது.
இந்த இரண்டாம் கட்ட ஆட்டம் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுவதால் சென்னை அணி வீரர்களின் பேட்டிங் திறன் பாதிக்கப்படலாம். ஐ.பி.எல். போட்டியில் ஒரு அணியை தேர்வு செய்ய சொன்னால் என்னை பொறுத்தவரை அது மும்பை இந்தியன்சாக இருக்கும்.
இப்போது நடைபெறும் ஐபில் தொடரில் பங்குக்கொள்ளும் வீரர்கள் தங்கள் திறமையை காண்பித்தால் உலக கோப்பை அணியில் இடம்பெற இன்னும் வாய்ப்பு இருக்கிறது. அதோடு அக்டோபர் 10-ஆம் தேதி வரை அணிகளை மாற்றம் செய்ய ஐ.சி.சி. அனுமதி வழங்கியுள்ளத்தையும் நாம் கவனிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்