“கேப்டன் பொறுப்பை மறந்துட்டு மொதல்ல இதை பண்ணுங்க”.. ரோகித் ஷர்மாவுக்கு சேவாக் சொன்ன முக்கிய அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வீரேந்தர் சேவாக் முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.

“கேப்டன் பொறுப்பை மறந்துட்டு மொதல்ல இதை பண்ணுங்க”.. ரோகித் ஷர்மாவுக்கு சேவாக் சொன்ன முக்கிய அட்வைஸ்..!

நடப்பு ஐபிஎல் தொடர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சோதனையாக அமைந்துள்ளதே இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் கூட மும்பை அணி வெற்றி பெறவில்லை இதனால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இந்த சூழலில் இன்று (13.04.2022) பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடுகிறது.

இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார் அதில், ‘சிஎஸ்கே அணி செய்தது போலவே மும்பையும் டாஸ் தோற்கும் பட்சத்தில் எக்ஸ்ட்ரா ரன்களை குவிக்க வேண்டும். மும்பை அணியிடம் இருக்கும் தற்போதைய பந்து வீச்சை வைத்துக் கொண்டு 160-170 போன்ற ரன்களை அடித்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. பும்ராவும் எவ்வளவுதான் தனியாளாக போராட முடியும்.

Sehwag give important advice to MI captain Rohit Sharma

ரோகித் சர்மா பேட்டிங் செய்ய களமிறங்கும் போது தன்னை ஒரு கேப்டன் என்பதை மறந்துவிட்டு, ஹிட்மேன் என்பதற்கு ஏற்றார்போல் செயல்பட வேண்டும். சிஎஸ்கே போல அவர்கள் முதலில் விக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு கடைசி 10 ஓவர்களில் அதிரடி காட்ட வேண்டும். முதலில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட வேண்டும். அதேபோல் பேசாமல் இருக்கும் பொல்லார்ட்டின் பேட் பேசினால் அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும்’ என சேவாக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்