போட்டிக்கு முன்னாடி ஆஹா, ஓகோன்னு பேசுவாங்க.. ஆனா முடிவு எப்படி இருக்கும் தெரியுமா..? பாகிஸ்தானை பங்கமாய் கலாய்த்த சேவாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாட உள்ளது குறித்து சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

போட்டிக்கு முன்னாடி ஆஹா, ஓகோன்னு பேசுவாங்க.. ஆனா முடிவு எப்படி இருக்கும் தெரியுமா..? பாகிஸ்தானை பங்கமாய் கலாய்த்த சேவாக்..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 24-ம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அரசியல் பிரச்சனை காரணமாக ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகள் மோதி வருகின்றன.

Sehwag explains why Pakistan never win against India at the big stage

நீண்ட ஆண்டுகளுக்கு பின் இரு அணிகளும் மோதயிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், இந்திய அணியை எளிதாக வீழ்த்தி விடுவோம் எனக் கூறி வருகின்றனர்.

Sehwag explains why Pakistan never win against India at the big stage

இதற்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‘ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானை விட இந்தியாவே முன்னணியில் உள்ளது. இதற்கு காரணம் இந்திய அணியில் யாரும் அதிகமாக வாய் பேசமாட்டார்கள். பாகிஸ்தான் அணியோ போட்டிக்கு முன், நாங்கள் வரலாற்றை மாற்றப்போகிறோம், வீழ்த்தப்போகிறோம் என வாய் வார்த்தை விடுவார்கள். ஆனால் முடிவு அப்படியே வேறு மாதிரி இருக்கும்.

Sehwag explains why Pakistan never win against India at the big stage

2003 மற்றும் 2011 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை விட இந்தியா சிறப்பாக விளையாடி இருந்தது. நம் வீரர்கள் வீணாக பேசுவதை விடுத்து போட்டிக்கு தயாராகவே அதிக கவனம் செலுத்துகின்றனர். அதற்கான முடிவுகளையும் நாம் பார்த்து வருகிறோம். அதனால்தான் ஐசிசி தொடர்களில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துகிறது.

Sehwag explains why Pakistan never win against India at the big stage

தற்போது டி20 உலகக்கோப்பை தொடரின் சூழலை வைத்துப் பார்க்கும்போது பாகிஸ்தானுக்கும் சம வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஏனென்றால், டி20 கிரிக்கெட்டில் ஒரு வீரர் கூட ஆட்டத்தை மாற்றிவிட முடியும். ஆனால் இதை பாகிஸ்தான் செய்யுமா என்பதே சந்தேகம்தான். 24-ம் தேதி என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்’ என சேவாக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்