'வடா பாவ் என ரோகித் சர்மாவை அழைத்த...' 'பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்...' - ரோகித் ரசிகர்கள் கடும் கொந்தளிப்பு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், 'வடா பாவ்' என கூறிய சம்பவம் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வீரர்களில் சிலர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது துபாய் அமீரகத்தில் நடக்கும் ஐ.பி.எல் விளையாட்டு காரணமாக பல வீரர்கள் தங்களின் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியுள்ளனர் எனலாம்.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா உடல் எடை அதிகரித்த பட்டியலில் சேர்ந்ததால் ரோகித் சர்மா இடம் பெறாத நிலையில் அவரது பிட்னெஸ் குறித்து பேசிய சேவாக், 'வடா பாவ்' என ரோகித் சர்மாவை அழைத்தார். 'வடா பாவ்' என்பது பன்னில் உருளைக்கிழங்கு மசாலா போன்டாவை சேர்த்து விற்கப்படும் மும்பையின் சிறந்த சாலையோர உணவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் சவுரப் திவாரி தற்போது அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளாதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ரோகித் சர்மாவை வடா பாவ் என சேவாக் அழைத்ததால், ரோகித் சர்மா ரசிகர்கள் சேவாக்கை கடுமையாக திட்டி வருகிறார்கள்.
மற்ற செய்திகள்