Annaathae others us

கதம், பை.. பை.. டாடா குட் பை...! 'டி-20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய நிலையில்...' - மீம்ஸ் போட்டு 'மரண பங்கம்' செய்த முன்னாள் வீரர்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா டி20 உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

கதம், பை.. பை.. டாடா குட் பை...! 'டி-20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய நிலையில்...' - மீம்ஸ் போட்டு 'மரண பங்கம்' செய்த முன்னாள் வீரர்கள்...!

அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.சி.சி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் முதலில் இருந்தே இறுதி போட்டிக்கு செல்லும் என்று அனைவராலும் நம்பப்பட்ட இந்திய அணி கடைசியில், நெட் ரன் ரேட் என்று அடுத்தவர் வெற்றியிலும் தோல்வியிலும் தங்கள் வாய்ப்பை தேடி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

Sehwag and wasim jaffer teased the Indian team on memes

நேற்றைய (07-11-2021) ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியே இந்தியா அரை இறுதிப்போட்டிக்குள் நுழையுமா இல்லையா என்பதை முடிவு செய்யும்.

இந்திய ரசிகர்களோ இந்தியா களத்தில் ஆடிய போட்டியை விட நேற்றைய ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியை தான் கண் கொட்டாமல் பார்த்தார்கள் எனலாம். இந்த போட்டியில் நியூசிலாந்து தோற்றால் கண்டிப்பாக இந்தியா அரை இறுதி சுற்றுக்கு நுழையும்.

ஆனால், பரிதாபமாக நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஆப்கானை பந்தாடியது. இதில் ஆப்கானிஸ்தான் ரசிகர்களை விட மிகவும் வருத்தப்பட்டது இந்திய ரசிகர்கள் தான். நேற்று நியூசிலாந்து அணி வெற்றியால் இந்தியா உலகக்கோப்பை டி-20 போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

டி-20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி  கேப்டனாக இருக்கும் கடைசி தொடர் இது தான். அதோடு, ரவி சாஸ்திரி-விராட் கோலி வெற்றிக்கூட்டணியும் இந்த கிரிக்கெட் தொடரோடு முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியா சூப்பராக ஆடும் போதே வெளுத்து வாங்கும் விரேந்திர சேவாக் இப்போது சும்மா இருக்கும் வாய்க்கு பொறி கிடைத்தது போல இந்திய அணி குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதோடு, சேவாக், ராகுல் காந்தி பேசும் படத்தை ட்விட்டரில் 'கதம், பை.. பை.. டாடா குட் பை' என மீம் போட்டு கிண்டல் செய்துள்ளார்.

 

வாசிம் ஜாஃபர் அதற்கு அடுத்த லெவலில் சென்று பைக்கில் ஆப்கான், இந்தியா இரண்டையும் கழற்றி விட்டு நியூசிலாந்து வண்டியை எடுத்துச் செல்வது போல் மீம் போட்டுள்ளார்.

 

WASIM-JAFFER, SEHWAG, MEMES

மற்ற செய்திகள்