அன்னைக்கு 'அவர' தூக்கிட்டு ரோகித் ஷர்மாவ போடலாம்னு இருந்தாங்க...! நானும் 'தோனியும்' தான் அதெல்லாம் முடியாதுன்னு சொல்லி 'அவர' விளையாட வச்சோம்...! - சேவாக் பகிர்ந்த தகவல்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அன்னைக்கு 'அவர' தூக்கிட்டு ரோகித் ஷர்மாவ போடலாம்னு இருந்தாங்க...! நானும் 'தோனியும்' தான் அதெல்லாம் முடியாதுன்னு சொல்லி 'அவர' விளையாட வச்சோம்...! - சேவாக் பகிர்ந்த தகவல்...!

ஆடிய கால்களையும், பாடிய  வாயையும் நிறுத்த முடியாது என்ற பழமொழிகேற்ப இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் எல்லா கிரிக்கெட் தொடரின் போதும் இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தன் ட்விட்டரில் ஏதாவது ஒரு செய்தியை பதிவிடுவார்.

Sehwag and Dhoni said virat kohli should be in the team

ஒரு சில நேரங்களில் அவரின் கருத்திற்கு விமர்சனங்கள் எழுந்திருந்தாலும், பல சுவாரஸ்யமான விஷயங்களும் வைரலாகி உள்ளது. அதுபோல இப்போது சேவாக் விராட் கோலி குறித்து தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

அதில், 'அது டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி அறிமுகமான சமயம். அப்போது இந்திய அணியில் இருந்த விராட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் வெறும் 76 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பின் வந்த ஆஸ்திரேலிய தொடரின் போதும் விராட் ரன் எடுக்க மிகவும் தடுமாறினார்.

Sehwag and Dhoni said virat kohli should be in the team

இதனால் அவரை மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அணியில் கோலியை எடுக்கலாமா ? வேண்டாமா ? என்ற குழப்பத்தில் இந்திய அணி நிர்வாகம் இருந்தது. அதோடு, கோலிக்கு பதில் ரோகித் சர்மாவை அணியில் சேர்க்கவும் பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால், அப்போது கேப்டனாக இருந்த தோனியும், துணை கேப்டனாக இருந்த நானும் கோலியை நீக்கக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தோம்.

Sehwag and Dhoni said virat kohli should be in the team

அதன்பின் விராட் ஆடிய ஆட்டத்தை இந்தியாவே கண்டது. 2012-ஆம் ஆண்டு பெர்த் டெஸ்ட்க்கு முன்பாக அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்ற நேரத்திலும் நானும் தோனியும் கோலிக்கு ஆதரவு அளித்தோம்.

அடுத்த சில ஆண்டுகளில் விராட் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது வரலாற்றை படைக்க ஆரம்பித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக மாறி விராட் கோலி மாறினார். இப்போது தோனிக்கு பிறகு கேப்டனாகவும் பதவியேற்ற அவர் கேப்டனாகவும் சிறந்து விளங்குகிறார்' எனக் கூறியுள்ளார்.

SEHWAG, DHONI, VIRAT KOHLI

மற்ற செய்திகள்