Vilangu Others

எழுந்து நின்று பாராட்டிய டிராவிட்.. சூரிய குமார் கொடுத்த செம்ம போஸ்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவரும் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரை இந்தியா கைப்பற்றியதை தொடர்ந்து T20 தொடரையும் இந்தியாவே தட்டித் தூக்கியது. இந்நிலையில் மூன்றாவது T20 போட்டியில் ஆறுதல் வெற்றியை கூட வெஸ்ட் இண்டீஸ் அணி பெறவில்லை.

எழுந்து நின்று பாராட்டிய டிராவிட்.. சூரிய குமார் கொடுத்த செம்ம போஸ்.. வைரலாகும் வீடியோ..!

கேரளாவை தொடர்ந்து மைசூர் மலையின் 300 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்ட மாணவர்.. ஹெலிகாப்டரில் மீட்கும் பரபரப்பு காட்சிகள்..!

ஒயிட் வாஷ்

முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 8 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

சூர்ய குமார் அதிரடி

போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்தது. இதனை அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். ருதுராஜ் கெய்வாட் 4 ரன்களில் அவுட்டாகி கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். இஷான் கிஷன் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் (25), நடுவரிசையில் இறங்கிய கேப்டன் ரோகித் 7) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

See surya kumar yadav response to the dravid after he scored 50

இதனையடுத்து அதிரடி ஜோடியான சூரிய குமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் அய்யர் களத்திற்கு வந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சாளர்களை இருவரும் சேர்ந்து துவம்சம் செய்தனர். 31 பந்துகளை சந்தித்த சூரிய குமார் யாதவ் ஒரு பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை பறக்கவிட்டு 65 ரன்களை குவித்தார்.

நமஸ்தே

இந்தப் போட்டியில் அதிரடி காட்டிய சூரிய குமார் யாதவ் அரை சதம் அடித்தார். அப்போது, மகிழ்ச்சியுடன் தனது பேட்டை உயர்த்தி காண்பித்தார். டக்கவுட்டில் இருந்த இந்திய அணி வீரர்கள் கரகோஷம் எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் எழுந்து நின்று சூர்ய குமார் யாதவை கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

இதனைக்கண்ட சூர்யா உடனே  தனது இரு கைகையும் குவித்து வணக்கம் தெரிவித்தார். தனது கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு சூரிய குமார் யாதவ் வணக்கம் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

300 ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!

SURYA KUMAR YADAV, DRAVID, INDIA VS WEST INDIES, T20 MATCH, வெஸ்ட் இண்டீஸ், சூர்ய குமார்

மற்ற செய்திகள்