மனக் கோட்டை கட்டி வைத்த 'சிஎஸ்கே' ரசிகர்கள்... சுக்கு நூறாக்கிய முன்னாள் 'சென்னை' வீரரின் 'ட்வீட்'.. கடுப்பாகி 'ரசிகர்கள்' போட்ட 'கமெண்ட்ஸ்'!.. 'பரபரப்பு' சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன், வரும் 9 ஆம் தேதியன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இதன் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.

மனக் கோட்டை கட்டி வைத்த 'சிஎஸ்கே' ரசிகர்கள்... சுக்கு நூறாக்கிய முன்னாள் 'சென்னை' வீரரின் 'ட்வீட்'.. கடுப்பாகி 'ரசிகர்கள்' போட்ட 'கமெண்ட்ஸ்'!.. 'பரபரப்பு' சம்பவம்!!

இதுவரை நடந்து முடிந்துள்ள 13 ஐபிஎல் சீசன்களில், மும்பை அணி அதிகபட்சமாக 5 முறையும், அடுத்ததாக சென்னை அணி 3 முறையும் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இதில், சென்னை அணி கடந்த சீசனில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல், முதல் முறையாக வெளியேறியிருந்தது. இதனால், சென்னை அணியின் சீனியர் வீரர்களின் பேட்டிங் மீது கடுமையான விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.

அது மட்டுமில்லாமல், சென்னை அணியில் இளம் வீரருக்கு சரிவர வாய்ப்புகள் வழங்காததால் தான் அந்த அணி சொதப்பியது என்றும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இந்த முறை தங்கள் மீதான விமர்சனங்களை சரி செய்யும் முனைப்பில் சென்னை அணி களமிறங்கவுள்ளது. கடந்த முறை, தனிப்பட்ட காரணங்களால் விலகிய சுரேஷ் ரெய்னா, இந்த முறை மீண்டும் அணியில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அணி இந்த முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடியுள்ளார்.

இந்நிலையில், 14 ஆவது ஐபிஎல் சீசனில் எந்த அணி கோப்பையை வெல்வார்கள் என்பது பற்றியும், 8 அணிகள் புள்ளிப் பட்டியலில் எந்த இடத்தை பிடிக்கும் என்பது பற்றியும் கணித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், பலம் வாய்ந்த அணியான மும்பை அணிக்கு முதலிடத்தை கொடுத்துள்ளார். தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இடம்பெற்றுள்ளது.

இதில், சென்னை அணிக்கு ஸ்டைரிஸ் கொடுத்துள்ள இடம் தான் ரசிகர்களிடையே அதிகம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணி புள்ளிப் பட்டியலில், கடைசி இடத்தை பெற்று வெளியேறும் என அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், ரசிகர்கள் அதிகம் கொதித்து எழுந்துள்ளனர். ஒரு சீசனில் மோசமாக ஆடியதை வைத்து இப்படியா கணிப்பது என்ற கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் சிஎஸ்கே வீரர் ஒருவரே, இப்படி பட்டியலில் சென்னை அணிக்கு கடைசி இடத்தை அளித்துள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்