ரிஷப் பண்ட்க்கு எதிரா 'ஸ்மித்' செஞ்ச 'வேலை'??... வெளியாகியுள்ள புதிய 'வீடியோ'... "அப்போ இதான் உண்மையா இருக்குமோ??..."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி 'டிரா'வில் முடிவடைந்ததையடுத்து அந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் செய்திருந்த செயல் ஒன்று கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

ரிஷப் பண்ட்க்கு எதிரா 'ஸ்மித்' செஞ்ச 'வேலை'??... வெளியாகியுள்ள புதிய 'வீடியோ'... "அப்போ இதான் உண்மையா இருக்குமோ??..."

இந்திய வீரர் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, குளிர்பானம் அருந்த வேண்டி சென்றிருந்தார். அவர் சென்று திரும்பவும் ஆட வருவதற்குள் பேட்டிங் செய்யும் இடத்திற்கு வந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித், ரிஷப் பண்டின் க்ரீஸ் கார்டை காலால் சுரண்டி அழித்தார்.

பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் ஆட உள்ளே வரும் போது, தாங்கள் எங்கு நின்று ஆட வேண்டும் என்பதற்கான க்ரீஸ் கார்டை மூன்று ஸ்டம்ப்களில் ஒன்றைத் தேர்வு செய்து, அதில் ஒரு கோட்டை ஏற்படுத்தி ஆடுவது வழக்கம். அந்த கோட்டை ஸ்மித் அழித்ததாக வீடியோ ஒன்று வெளியாகிய நிலையில், ஸ்மித் மீது கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் அவரின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

இதன் பிறகு, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின், ஸ்மித் அப்படி ஒரு தவறை செய்யவில்லை என்றும், அப்படி அவர் செய்திருந்தால் இந்திய வீரர்கள் ஏன் மைதானத்தில் வைத்தே புகார்களை தெரிவிக்கவில்லை என்றும் ஸ்மித்துக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதே போல ஸ்மித் இந்த செயலால் அதிகம் வருத்தமடைந்ததாகவும் டிம் பெயின் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்த கருத்தை உண்மையாகும் வகையில் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஸ்மித் தனது காலால் க்ரீஸ் கார்டை அழிக்கும் வீடியோ மட்டும் வெளியாகியிருந்த நிலையில், அதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை விளக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மைதானத்திலுள்ள ஊழியர்கள், ஸ்மித் வருவதற்கு முன்னரே ரிஷப் பண்டின் கிரீஸ் கார்டை அழித்து அதன் பின்னர் பேட்டிங் செய்யும் இடத்தை சுத்தம் செய்தனர். 

 

அப்போதே க்ரீஸ் கார்ட் அழிந்து போயிருக்கும் நிலையில், அதன் பிறகு ஸ்மித் செய்த செயல் எப்படி தவறாக இருக்கும் என தற்போது ஸ்மித்துக்கு ஆதரவாக ரசிகர்கள் ஆதாரத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்