Udanprape others

‘திடீர் மாரடைப்பு’!.. இளம் ‘விக்கெட் கீப்பர்’ உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ‘இந்திய’ கிரிக்கெட் உலகம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘திடீர் மாரடைப்பு’!.. இளம் ‘விக்கெட் கீப்பர்’ உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ‘இந்திய’ கிரிக்கெட் உலகம்..!

சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக விளையாடி வந்தவர் 29 வயதான அவி பரோட் (Avi Barot). இவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு 2011-ம் ஆண்டு கேப்டனாக இருந்துள்ளார். அதேபோல் கடந்த ஆண்டு நடந்த ரஞ்சி கோப்பை தொடரில் சவுராஷ்ட்ரா அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

Saurashtra wicketkeeper-batsman Avi Barot dies due to heart attack

மேலும் 38 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளர். அதேபோல் சவுராஷ்டிரா அணிக்காக 21 ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள், 17 ஏ பிரிவு போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டு நடந்த சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் 53 பந்துகளில் சதம் (122 ரன்கள்) அடித்து அசத்தியிருந்தார்.

Saurashtra wicketkeeper-batsman Avi Barot dies due to heart attack

இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பால் (Cardiac arrest) அவி பரோட் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு சவுராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இளம் விக்கெட் கீப்பர் மாரடைப்பால் உயிரிழந்தது இந்திய கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்