"அர்ஜுன் டெண்டுல்கரை விட நான்தான்ப்பா அதிர்ஷ்டசாலி".. சின்ன வயசுல தந்தையை கண் கலங்க வெச்ச இளம் வீரர்.. எமோஷனல் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி, தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றி உள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையில், இதற்கடுத்ததாக இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரும் நடைபெற உள்ளது.

"அர்ஜுன் டெண்டுல்கரை விட நான்தான்ப்பா அதிர்ஷ்டசாலி".. சின்ன வயசுல தந்தையை கண் கலங்க வெச்ச இளம் வீரர்.. எமோஷனல் பின்னணி!!

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு மத்தியில், இந்தியாவின் பிரபல உள்ளூர் தொடரான ரஞ்சி தொடரும் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய இளம் வீரர் சர்ஃபராஸ் கானும் சிறப்பாக ஆடி வருகிறார். ஐபிஎல் உள்ளிட்ட பல உள்ளூர் தொடர்களிலும் அவர் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், விரைவில் சர்வதேச இந்திய அணிக்காக சிறந்த பங்களிப்பை கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிறுவயதில் சர்ஃபராஸ் கான் பேசிய சில விஷயம் குறித்து அவரது தந்தையான நௌஷாத் கான் தற்போது சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சர்ஃபராஸ் கானை போலவே அவரது தந்தை நௌஷாத் கானும் கிரிக்கெட் வீரர் ஆவார். சிறு வயது முதலே சர்ஃபராஸ் கானுக்கு பயிற்சி அளித்துவரும் நௌஷாத் கான், சமீபத்தில் சர்ஃபராஸ் கானின் இளமைபருவத்தில் நடந்த சம்பவம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Sarfaraz khan father recalls his son emotional words

Images are subject to © copyright to their respective owners.

"சர்ஃப்ராஸ் கானும், அர்ஜுன் டெண்டுல்கரும் (சச்சின் டெண்டுல்கரின் மகன்) சிறுவயது முதலே ஒன்றாக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இருவரும் ஒரே இடத்தில் விளையாடுவதால் அர்ஜுனை சர்ஃபராஸ்கான் தினமும் சந்திப்பது வழக்கம். ஒருநாள் சர்ஃபராஸ் என்னிடம் வந்து, 'அப்பா, அர்ஜுன் டெண்டுல்கர் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. இந்த வயதிலேயே அவருக்கு கார், ஐபேட் என அனைத்தும் உள்ளது' என தெரிவித்தார். அப்போது ஒரு தந்தையாக நான் பட்ட தவிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும்.

என்னால் அந்த நேரத்தில் எதுவுமே சொல்ல முடியவில்லை. அப்போது சர்ஃபராஸ் கான் என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அர்ஜுனை விட நான் தான் அப்பா அதிர்ஷ்டசாலி. ஏன் தெரியுமா?. என் தந்தை எப்போதும் என்னுடன் இருக்கிறார். ஆனால் அர்ஜுனின் அப்பா அவருடன் நிறைய நேரம் செலவிடுவதில்லை" என தன்னிடம் கூறியதாக மனம் உருகி நௌஷாத் கான் தற்போது குறிப்பிட்டுள்ளார்.

Sarfaraz khan father recalls his son emotional words

Images are subject to © copyright to their respective owners.

மேலும் சிறு வயதிலேயே சர்ஃபராஸ் கான் அப்படி கூறியது தனது வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் நௌஷாத் கான் கூறி உள்ளார்.

SACHIN TENDULKAR, ARJUN TENDULKAR, SARFARAZ KHAN, FATHER

மற்ற செய்திகள்