asuran USA HOME

நிர்வாணமாக விக்கெட் கீப்பிங், பேட்டிங் போன்ற போட்டோவை வெளியிட்டு அதிர வைத்த ‘சாரா டெய்லர்’ எடுத்த திடீர் முடிவு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நிர்வாணமாக விக்கெட் கீப்பிங், பேட்டிங் போன்ற போட்டோவை வெளியிட்டு அதிர வைத்த ‘சாரா டெய்லர்’ எடுத்த திடீர் முடிவு..!

கடந்த 2006 -ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் சாரா டெய்லர் அறிமுகமானார். இவர் இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட், 126 ஒருநாள், 90 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீபத்தில் மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து வெளிவருவது குறித்து விழிப்புணர்வு செய்து வரும் இதழ் ஒன்றுக்கு, நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் செய்வதுபோல் புகைப்படம் ஒன்றை அளித்தார்.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, எதற்காக வெளியிட்டேன் என்ற காரணத்தையும் தெரிவித்தார். இந்த புகைப்படம் அப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து மேலாடையின்றி பேட்டிங் செய்வதுபோல் மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டுட்டார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட உரசல் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த சாரா டெய்லர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Waiting to go into bat like ... • @womenshealthuk • #thenakedissue #womenshealthmag #portrait

A post shared by Sarah Taylor (@sjtaylor30) on

CRICKET, SARAHTAYLOR, RETIREMENT, ENGLAND