'அவ்ளோ தான் முடிஞ்சது!.. இனி அவருக்கு வாய்ப்பு கிடைப்பது ரொம்ப கஷ்டம்'!.. பூதாகரமாகும் Playing 11 சர்ச்சை!.. யார் செய்வது சரி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-இங்கிலாந்து இடையிலான டி20 போட்டிகளில் இந்திய வீரர்களிடையே பாகுபாடு பார்த்து வாய்ப்புகள் அளிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு மேலும் வலுவடைந்துள்ளது.

'அவ்ளோ தான் முடிஞ்சது!.. இனி அவருக்கு வாய்ப்பு கிடைப்பது ரொம்ப கஷ்டம்'!.. பூதாகரமாகும் Playing 11 சர்ச்சை!.. யார் செய்வது சரி?

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்சமயம் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது, பின்னர் நேற்று நடந்த 3வது போட்டியில் மீண்டும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் 4 ஆவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் களம் இறங்கிய ஷிகர் தவான் 12 பந்துகளை பிடித்து வெறும் 4 ரன்களில் அவுட்டானார். அதன் பின்னர், அடுத்து நடந்த இரண்டு போட்டிகளில் தவானுக்கு விளையாட வாய்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில், இது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஷிகர் தவானுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. அத்தனை வாய்ப்புகளையும் அவர் தனது திறமையை நிரூபிக்க தவறி விட்டார். எனவே இவருக்கு இனி வாய்ப்பு என்பது மிகக் குறைவான அளவிலேயே இருக்கும்.

மேலும், கேஎல் ராகுல் மிகச்சிறந்த டி20 பேட்ஸ்மேன் ஆவார். அவர் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டி20 தொடரில் ஏதோ மன அழுத்தத்தில் உள்ளார் என்பது தெரியவருகிறது.

அதனாலேயே அவரால் சிறப்பாக பங்களிக்க முடியவில்லை. எனினும், அதிலிருந்து மீண்டு வந்து தனது பழைய அதிரடி ஆட்டத்தை நிச்சயம் திரும்ப காண்பிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில், தவானுக்கு ஒரு போட்டியில் மட்டும் விளையாட வாய்ப்பு வழங்கி அவர் அதில் நிரூபிக்க தவறியதால் மற்ற இரண்டு போட்டிகளில் அவரை களம் இருக்கவில்லை.

அதேபோல கே எல் ராகுலுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளித்து அந்த இரண்டிலும் அவர் நிரூபிக்க தவறியதால் அவரை மூன்றாவது போட்டியில் களமிறங்க வைத்திருக்கக்கூடாது. தவானுக்கு ஒரு நியாயம் ராகுலுக்கு ஒரு நியாமா என்று தவான் ரசிகர்கள் சோசியல் மீடியா வலைதளங்களில் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

 

மற்ற செய்திகள்