நானா இருந்தா 'அவரு' மாதிரி ஒரு ப்ளேயரை 'டீம்'ல வச்சுருக்கவே மாட்டேன்...! - 'தமிழக' வீரரை விளாசி தள்ளிய சஞ்சய் மஞ்ச்ரேகர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று முன் தினம் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணி மோதியது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக தவான் 36 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 30 ரன்களும் எடுத்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய கொல்கத்தா அணி முதலில் இருந்தே அடித்து ஆடினாலும் இடையில் செமயாக சொதப்பி வெற்றி டெல்லிக்கு தான் என நினைக்க வைத்தது. இருப்பினும் தட்டு தடுமாறி களத்தில் நின்றாலும் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.
அப்போது கடைசி ஓவரில் டெல்லி அணியின் அஸ்வின் களமிறக்கப்பட்டார். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி ஓவரில் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், ராகுல் திரிபாதி 5-வது பந்தில் சிக்ஸர் அடித்ததால் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அஸ்வின் என்னதான் சிறப்பாக விளையாடினாலும் முன்னாள் வீரர்கள் சிலர் அஸ்வின் தான் தோல்விக்கு காரணம் என கூறி வருகின்றனர். அவ்வகையில், சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் போன சஞ்சய் மஞ்ச்ரேகரும் அஸ்வினை விமர்சித்துள்ளார்.
அஸ்வின் குறித்து கூறும் போது, 'நான் ஒரு அணியை உருவாக்குகிறேன் என்றால் அதில் கண்டிப்பாக அஸ்வின் இடம்பெற மாட்டார். ஏனென்றால் கடந்த ஐந்து வருடமாகவே அஸ்வின் ஒரே மாதிரியாக விளையாடி வருகிறார். அஸ்வின் தனது பந்துவீச்சில் கடந்த சில வருடங்களாகவே எந்தவித முன்னேற்றங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தி கொள்வதே இல்லை.
அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் கலக்குவார். ஆனால் டி20 போட்டிகளில் அஸ்வினை எடுப்பது பயனளிக்காது. turning பிட்ச்களில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், சாஹல் போன்ற வீரர்கள் விக்கெட் வீழ்த்தி கொடுக்கின்றனர். நான் என்னுடைய அணியில் அஸ்வினுக்கு பதிலாக இவர்களில் ஒருவரை தான் அணியில் வைத்து கொள்ள வேண்டும்' என காட்டமாக தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்