"கொஞ்ச நேரம் 'பேட்டிங்' பண்ணாலும்.. சும்மா 'சரவெடி' மாதிரி வெடிக்குறாரே.." 'தமிழக' வீரரை தாறு மாறாக பாராட்டிய 'சஞ்சய் மஞ்ச்ரேக்கர்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி, இதுவரை ஆடியுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

"கொஞ்ச நேரம் 'பேட்டிங்' பண்ணாலும்.. சும்மா 'சரவெடி' மாதிரி வெடிக்குறாரே.." 'தமிழக' வீரரை தாறு மாறாக பாராட்டிய 'சஞ்சய் மஞ்ச்ரேக்கர்'!!

கடைசியாக, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது. பேட்டிங்கில் கலக்கிய பஞ்சாப் அணி, பந்து வீச்சில் சொதப்பியதால், கடின இலக்கை 19 ஆவது ஓவரிலேயே எட்டிப் பிடித்து, டெல்லி அணி அசத்தல் வெற்றி பெற்றிருந்தது.

பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக உள்ள பஞ்சாப் அணி, பந்து வீச்சில் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருவதால், அதனைக் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் அணியின் கேப்டன் கே எல் ராகுல் (KL Rahul). இதனிடையே, பஞ்சாப் அணியிலுள்ள தமிழக வீரர் ஒருவரைப் பாராட்டி, இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (Sanjay Manjrekar) ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.

பஞ்சாப் அணியின் கடைசி ஓவர்களில் போது களமிறங்கய தமிழக வீரர் ஷாருக் கான் (Shahrukh Khan), கடைசியில் தான் சந்தித்த 5 பந்துகளில், 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 15 ரன்கள் எடுத்தார். மிக குட்டி இன்னிங்ஸாக இருந்தாலும், அறிமுக ஐபிஎல் சீசனிலேயே எந்தவித பதட்டமும் இல்லாமல், தன்னுடைய ஸ்டைலில் அதிரடியாக ஆடி அசர வைத்தார்.

முன்னதாக, சென்னை அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் 106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், ஷாருக் கான் தனியாளாக போராடி, 47 ரன்கள் எடுத்திருந்தார். அனைவரின் கண்ணும் இந்த இளம் வீரர் பக்கம் திரும்பி வரும் நிலையில், சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் பாராட்டத் தவறவில்லை.

அவர் தனது ட்வீட்டில், 'கடைசி போட்டியில் சிறந்த மனநிலையுடன் ஆடிய ஷாருக் கான், டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் அற்புதமான சிறிய இன்னிங்ஸ் ஒன்றை ஆடியுள்ளார்' என ஷாருக் கானைப் பாராட்டி சஞ்சய் மஞ்சரேக்கர் ட்வீட் செய்துள்ளார்.

 

இந்தியாவில், இந்த வருடம் டி 20 உலக கோப்பை நடைபெறவுள்ள நிலையில், இதற்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்பதை முடிவு செய்வதில், ஐபிஎல் தொடருக்கும் மிக முக்கிய பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்