"கோலி பண்ணத ரோஹித்தும் பண்ணுவாருன்னு நெனச்சேன், ஆனா.." சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் ஆதங்கம்.. இது எல்லாம் 'First' நடக்குமா??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ள அணி மும்பை இந்தியன்ஸ் ஆகும். இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

"கோலி பண்ணத ரோஹித்தும் பண்ணுவாருன்னு நெனச்சேன், ஆனா.." சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் ஆதங்கம்.. இது எல்லாம் 'First' நடக்குமா??

இந்த ஐந்து முறையும் ரோஹித் ஷர்மா தான் மும்பை அணியை வழிநடத்தி இருந்தார்.

ஆனால், ரோஹித் ஷர்மா தலைமையியலான மும்பை இந்தியன்ஸ் அணி, 15 ஆவது ஐபிஎல் சீசனில், இதுவரை ஆடியுள்ள நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

மோசமான ஆரம்பம்

தற்போது, தங்களின் ஐந்தாவது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டு வரும் மும்பை அணி, இதில் வென்று, தங்களின் வெற்றிக் கணக்கை தொடங்குவார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். முந்தைய சில சீசன்களிலும் ஆரம்பத்திலுள்ள லீக் போட்டிகளில் தோல்வி அடைந்து, பின் தொடர் வெற்றிகளால் இறுதி போட்டி வரை தகுதி பெற்று, மும்பை அணி கோப்பையைக் கைப்பற்றிய வரலாறும் உண்டு.

ஆனால், இந்த முறை அணியின் பந்து வீச்சிலிலுள்ள குறைகளை சரி செய்தால் மட்டும் தான் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது பற்றி யோசிக்க முடியும் என கிரிக்கெட் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இனி வரும் போட்டிகளில் மும்பை அணியின் பந்து வீச்சு செயல்பாட்டில் அதிக முன்னேற்றத்தை எதிர் நோக்கியும் ரசிகர்கள் ஆவலில் இருந்து வருகின்றனர்.

sanjay manjrekar felt rohit sharma hand over captaincy

இந்நிலையில், பிரபல வர்ணனையாளாரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கடந்த சீசன் வரை ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த கோலி, அதன் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். தொடர்ந்து இந்த முறை, பாப் டு ப்ளெஸ்ஸிஸை புதிய கேப்டனாகவும் பெங்களுர் அணி நியமித்திருந்தது.

ரோஹித் அத பண்ணி இருக்கணும்..

இதனைக் குறிப்பிட்டு பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "என்னை பொறுத்தவரையில் மும்பை அணியின் பொல்லார்ட் ஒரு மதிப்புள்ள வீரராகவே கருதப்படுகிறார். ஐபிஎல் தொடருக்கு முன்பாக, கோலியை பின்பற்றி ரோஹித்தும் கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்வார் என நான் நினைத்தேன். சற்று ரிலாக்ஸாக, முழு நேர பேட்ஸ்மேனாக மாறிக் கொண்டு, தன்னுடைய கேப்டன் பதவியை பொல்லார்ட்டிற்கு வழங்கி இருக்க வேண்டும்.

ஐபிஎல் போட்டிகளில் கடந்த சில சீசன்களாக, ரோஹித் ஷர்மாவின் ரன் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாகவே உள்ளது. ஆனால், இந்திய அணிக்காக அவர் பேட்டிங் செய்யும் போது அவர் சிறப்பாக ஆடுகிறார். ஏனென்றால், அப்போது தன்னுடைய ஆட்டத்தை பற்றி மட்டும் தான் கவனம் கொள்கிறார்.

sanjay manjrekar felt rohit sharma hand over captaincy

அதே வேளையில், ஐபிஎல் போட்டியின் போது, ராகுலை போல அணியை வழிநடத்திக் கொண்டு அதற்கேற்ப நிதானமாக பேட்டிங் செய்து ரன் குவிக்கிறார். எந்த வித அழுத்தமும் இல்லாமல், ரோஹித் ஷர்மா இயல்பாக ஆடினால், இந்திய அணிக்காக ஆடும் ரோஹித்தை நாம் ஐபிஎல் போட்டியிலும் காண முடியும்" என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

ROHIT SHARMA, VIRATKOHLI, SANJAY MANJREKAR, IPL 2022, RCB, MI, POLLARD

மற்ற செய்திகள்