கிரிக்கெட் பத்தி அவருக்கு எதுமே தெரியல.. 'கோலி' பெயரில் மோதிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் - ரவி சாஸ்திரி
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகிய நிலையில், ரவி சாஸ்திரி தெரிவித்த கருத்திற்கு, சஞ்சய் மஞ்சரேக்கர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த மறுநாளே அதன் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியது முதல், ஏகப்பட்ட பரபரப்பு இந்திய அணியை சுற்றி இயங்கி வருகிறது.
ஒரு நாள் கேப்டனாக இருந்த கோலியை பதவி நீக்கி, புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மாவை பிசிசிஐ நியமித்திருந்தது. டி 20 போட்டியில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட கோலியிடம் கேட்டுக் கொண்டோம் என்றும், அவர் அதற்கு விருப்பப்படவில்லை என்பதால், அவரை கேப்டன் பதவியில் இருந்து மாற்றினோம் என பிசிசிஐ அறிவித்திருந்தது.
ஒதுங்கிய கோலி
ஆனால், கேப்டனாக தொடர்ந்து செயல்பட, பிசிசிஐ தன்னிடம் கேட்டுக் கொள்ளவில்லை என கோலி தெரிவித்தது, இந்திய அணிக்குள் நிலவிய குழப்பத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. தொடர்ந்து, டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே கேப்டனாக செயல்பட்டு வந்த கோலி, அந்த பதவியில் இருந்தும் நீக்கினார்.
விமர்சனம்
கோலியின் முடிவு, பல முன்னாள் வீரர்களின் கருத்து மற்றும் விமர்சனங்களை சம்பாதித்தது. தொடர்ந்து, ஒரு நாள் தொடரில் இந்திய அணி வொயிட் வாஷ் செய்யப்பட்டதால், கோலி கேப்டனாக இருந்தால் சிறப்பாக செயல்பட்டிருப்பார் என்றும், பிசிசிஐ தவறான முடிவு எடுத்து விட்டது என்றும், சிலர் விமர்சனம் செய்தனர்.
ஜீரணிக்க முடியவில்லை
இந்நிலையில் , இந்திய அணிக்கு 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட ரவி சாஸ்திரி, கோலிக்கு எதிரான விமர்சனங்கள் பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். கோலி இன்னும் 2 ஆண்டுகள் கேப்டனாக தொடர்ந்திருந்தால் அதிக வெற்றிகளை பெற்றிருப்பார் என்றும், அவர் தொடர்ந்து பெறும் வெற்றிகளை சிலரால் ஜீரணிக்க முடியாது என்றும் கோலிக்கு எதிராக பேசியவர்களை விமர்சனம் செய்திருந்தார்.
நல்ல சீனியர் வீரர்
இந்நிலையில், ரவி சாஸ்திரியின் கருத்திற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். 'நான் ஒரு சமயத்தில் ரவி சாஸ்திரியின் மிகப் பெரிய ரசிகன். நான் அவரது தலைமையின் கீழ் ஆடியுள்ளேன். உடன் ஆடும் வீரர்களை சிறந்த முறையில் ஆதரவளிப்பார். நல்ல ஒரு சீனியர் வீரர்.
ரவி சாஸ்திரி 2.0
ஆனால், இப்போதுள்ள ரவி சாஸ்திரியின் 2.0 அவதாரம் தான் எனக்கு சுத்தமாக புரியவில்லை. அவர் பொதுவே சொல்லும் கருத்துக்கள், எதிர்பார்க்கப்படும் ஒன்று தான். அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அப்படி கருத்து சொல்லி, அவ மரியாதையை தேடிக் கொள்ளவும் எனக்கு இஷ்டமில்லை. புத்திசாலித்தனத்துடன் ஒரு கருத்தினை அவர் வெளியிடுவதுமில்லை. கிரிக்கெட் குறித்த ஒரு சிறந்த புரிதலும் ரவி சாஸ்திரியிடம் இல்லை' என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த டெஸ்ட் கேப்டன் பற்றி பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரோஹித் ஷர்மா தான் சிறந்த தேர்வு என்றும், புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் ஃபார்ம் அவுட்டில் இருப்பதால், வேறு யாரையும் சிந்திக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்