Ajinkya Rahane.. வை தூக்கி வெளியே வீசியிருப்பேன்.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆவேசம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நான் தேர்வாளராக இருந்திருந்தால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அந்த இந்திய வீரரை அணியில் இருந்து தூக்கியிருப்பேன் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

Ajinkya Rahane.. வை தூக்கி வெளியே வீசியிருப்பேன்.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆவேசம்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் ஆடவுள்ளது.

இதற்கான இந்திய அணி, சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. சீனியர் வீரர்கள் சிலருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

தொடர் தோல்வி

இதற்கு முன்பு, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் என இரண்டையும் இந்திய அணி இழந்திருந்தது. டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி, அதன் பிறகு நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும், தோல்வி அடைந்து தொடரை இழந்தது.

sanjay manjrekar criticizes ajinkya rahane batting in test

சொதப்பல்

இந்த டெஸ்ட் தொடரில் குறிப்பாக இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் கடுமையான விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்டனர். இந்திய டெஸ்ட் அணி கண்ட தலைச்சிறந்த பேட்ஸ்மேன்களில் இருவராக புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர், ஒரு சமயத்தில் செயல்பட்டு வந்தனர்.

ஏமாற்றிய சீனியர் வீரர்கள்

ஆனால், சமீப காலமாக இவர்கள் இருவரும் பேட்டிங்கில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாகவே, இவர்களை மாற்றி விட்டு, இளம் வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் தெரிவித்தனர். ஆனால், தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்ட போதும், இருவரும் சொதப்பினர்.

sanjay manjrekar criticizes ajinkya rahane batting in test

கடைசி டெஸ்ட் போட்டி

இதனால், இனி வரும் டெஸ்ட் தொடர்களில், ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரின் வாய்ப்பு என்பது கடினமாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரஹானேவை குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'ரஹானேவின் கடைசி டெஸ்ட் போட்டி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 ஆவது போட்டி என்று நான் சொன்னால், யாரும் ஆச்சரியப்பட போவதில்லை. ஏனென்றால், அனைவரும் எனது கருத்துடன் ஒத்துப் போவார்கள்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேத்தி திடீரென தூக்கிட்டு தற்கொலை

sanjay manjrekar criticizes ajinkya rahane batting in test

தடுமாற்றம்

எத்தனை ரன்களை ரஹானே அடிக்கிறார் என்பது முக்கியமில்லை. எப்படி அவர் பேட்டிங் செய்கிறார் என்பது தான் முக்கியம். அப்படி வைத்து பார்க்கும் போது, ரஹானே பேட்டிங் செய்வதையும், அவுட் ஆவதையும் பார்த்தால், அவர் தடுமாறுவது தெளிவாக தெரிகிறது. விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்றாலும், 70 ரன்களுக்கு மேல் அடித்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால், ரஹானேவிடம் தடுமாற்றம் தான் காணப்படுகிறது. என்னை பொறுத்தவரையில், ரஹானேவுடைய காலம் முடிந்து விட்டது.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேத்தி திடீர் தற்கொலை.. காரணம் என்ன? தீவிர விசாரணை

sanjay manjrekar criticizes ajinkya rahane batting in test

புஜாரா ஓகே தான்

நூறு டெஸ்ட் போட்டிகளை நெருங்கும் புஜாராவுக்கு கூட, ரஹானேவை விட அதிக காலம் இருப்பதாக, தனிப்பட்ட முறையில் நான் கருதுகிறேன். அவர்களின் பேட்டிங்கை புரிந்து கொண்டு தான் இதனை கூறுகிறேன். வேறு எதுவும் காரணமில்லை. புஜாராவிடம் ஏதோ இன்னும் மிச்சம் இருக்கிறது. ஆனால், ரஹானேவிடம் அப்படி எதுவுமில்லை.

sanjay manjrekar criticizes ajinkya rahane batting in test

நான் அணியின் தேர்வாளராக மட்டும் இருந்திருந்தால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ரஹானேவை அணியில் இருந்து நீக்கியிருப்பேன்' என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ரஹானேவின் பேட்டிங்கை விமர்சனம் செய்துள்ளார்.

SANJAY MANJREKAR, AJINKYA RAHANE, BATTING IN TEST, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்திய கிரிக்கெட் அணி

மற்ற செய்திகள்