"ரோஹித் பிரச்சனை இல்ல.. கோலி தான்".. சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் சர்ச்சை கருத்து! "என்னங்க சொல்றாரு?" - குழம்பும் ரசிகர்கள்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 33 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. ஏறக்குறைய பாதி லீக் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, முதலிடத்தில் உள்ளது.

"ரோஹித் பிரச்சனை இல்ல.. கோலி தான்".. சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் சர்ச்சை கருத்து! "என்னங்க சொல்றாரு?" - குழம்பும் ரசிகர்கள்..

Also Read | "தோனி டி 20 'World Cup'ல ஆடுவாரா??.." ஒரே ஒரு ட்வீட் மூலம் பத்திக்கிட்ட இணையம்.. நடந்தா நல்லா தாங்க இருக்கும்

இந்த ஆண்டு டி 20 உலக கோப்பை நடைபெறவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளது, நிச்சயம் இந்திய அணிக்கு கை கொடுக்கும் என தெரிகிறது.

ஆனால், அதே வேளையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர், ஐபிஎல் தொடரில் ஃபார்ம் அவுட்டில் இருப்பது, ரசிகர்கள் மத்தியல் அதிக விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரோஹித் மற்றும் கோலியின் ஃபார்ம்

இதுவரை 7 போட்டிகள் ஆடியுள்ள கோலி, 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மறுபக்கம், 7 போட்டிகள் ஆடியுள்ள ரோஹித் ஷர்மா, 114 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்திய அணியின் டாப் பேட்ஸ்மேன்களின் ஆட்டம், நிச்சயம் டி 20 உலக கோப்பைத் தொடரில் பாதிப்பை ஏற்படுத்துமா என்றும் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Sanjay Manjrekar about rohit and kohli form in ipl

கோலி தான் ஃபார்ம் அவுட்..

இந்நிலையில், வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கோலி மற்றும் ரோஹித் ஆகியோரை பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். "ரோஹித் ஷர்மா 20 ரன்களுக்கு மேல் அடிக்கும் போது, அவர் நல்ல டச்சில் இருப்பதாக தெரிகிறது. அவர் விராட் கோலியை போல நல்ல பார்மில் இல்லாத நிலையில் ஒன்றும் இல்லை. ரோஹித் நன்றாக பேட்டிங் செய்கிறார். ஆனால், அவர் திடீரென அவுட்டாகி விடுகிறார். மும்பை அணி எதிர்பார்க்கும் ஜோஸ் பட்லர் போன்ற பேட்ஸ்மேன் அடிக்கும், மிகப்பெரிய ஸ்கோர் மட்டும் ரோஹித்திற்கு கிடைக்கவில்லை" என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

Sanjay Manjrekar about rohit and kohli form in ipl

விமர்சனத்தை சந்தித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவருமே ஃபார்மில் இல்லாத வேளையில், "நன்றாக பேட்டிங்கை தொடங்கும் ரோஹித், எதிர்பாராத வகையில் அவுட்டாகி விடுகிறார்" எனக் கூறியதுடன், "கோலி அளவுக்கு ரோஹித், ஃபார்ம் அவுட் இல்லை" என சஞ்சய் மஞ்சரேக்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில், 40 ரன்களுக்கு மேல் கோலி எடுத்துள்ளார்.

இதேபோல், ரோஹித் ஒரு முறை தான் 40 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இப்படி, இரண்டு பேருமே ஐபிஎல் தொடரில் சரிவர ரன் குவிக்காமல் இருக்கும் நிலையில், 20 ரன்களுக்கு மேல் அடித்தால் கூட ரோஹித் நல்ல பார்மில் இருக்கிறார் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் அதிக விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.

Sanjay Manjrekar about rohit and kohli form in ipl

இது பற்றி, ட்விட்டரில் பலரும் சஞ்சயை குறிப்பிட்டு தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, SANJAY MANJREKAR, ROHIT SHARMA, VIRAT KOHLI, IPL 2022, ரோஹித் ஷர்மா, விராட் கோலி

மற்ற செய்திகள்