"அவரை பத்தி யாருமே பெருசா பேசலயே".. இந்திய வீரருக்காக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆதங்கம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தொடரில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி இருந்த இந்திய கிரிக்கெட் அணி, இந்த தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
அது மட்டுமில்லாமல், இந்த தொடரை கைப்பற்றியதுடன் இந்திய அணி, ஒரு நாள் போட்டி தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும் பிடித்திருந்தது. மறுபக்கம், சுப்மன் கில், ரோஹித், சிராஜ், குல்தீப் யாதவ் உள்ளிட்ட பல இந்திய வீரர்களும் இந்த ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.
அதிலும் சிறப்பாக பந்து வீசி நியூசிலாந்து அணிக்கு ஆட்டம் காட்டி இருந்த சிராஜ், ஒரு நாள் போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார். ஐபிஎல் தொடர் மூலம் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்திருந்த சிராஜ், ஆரம்ப கட்டத்தில் சற்று விமர்சனத்தை சந்தித்திருந்தார். ஆனால், தன் மீதான விமர்சனங்கள் அனைத்தையும் தாண்டி, தற்போது ஒரு நாள் போட்டியின் நம்பர் 1 பந்து வீச்சாளராகவும் மாறி உள்ளார். இதன் காரணமாக, பல கிரிக்கெட் பிரபலங்களின் பாராட்டுக்களையும் சிராஜ் பெற்று வருகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
"போட்டி முடிந்த பிறகு சிராஜ் குறித்து யாரும் பெரிய அளவில் யாருமே பேசவில்லை. முகமது சிராஜ் தற்போது எதிர்கொண்டுள்ள சூழலை பார்க்கும் போது ஒரு முழு அனுபவ வீரராக அவர் மாறி உள்ளார். இது ஒரு நாள் கிரிக்கெட், டி 20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்துக்கும் பொருந்தும்.
Images are subject to © copyright to their respective owners.
சுப்மன் கில் ஒரு சதம் மற்றும் இரட்டை சதம் அடித்திருந்தார். ஆனால் ஒரு பலம் வாய்ந்த எதிரணியை அதுவும் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் அவர்களை எதிர்கொள்ள சிராஜ் போன்ற வீரர் தான் உதவினார். இந்தியாவுக்கு தேவைப்படும் நேரத்தில் அவர் உதவினார். ஆனால், அவருக்கு அதிக அளவில் பாராட்டுக்கள் கிடைக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரும் தற்போது ஆரம்பமாகி உள்ளது.
மற்ற செய்திகள்