"மத்த எல்லாத்துலயும் 'சிஎஸ்கே' தூள் கெளப்புவாங்க!!... ஆனா 'அந்த' ஒரு விஷயம் மட்டும்... 'டீம்'க்கு பெரிய சவாலா இருக்கப் போகுது,,."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
2 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட பின் கடந்த 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சென்னை அணி, அதிரடியாக ஆடி அந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றியது. 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை தவறவிட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான சஞ்சய் பேங்கர் (Sanjay Bangar), சென்னை அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
'சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு அதிக அனுபவம் உள்ளது. அதே போல அணியில் அனுபவம் மிக்க வீரர்களும் உள்ளனர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சென்னை அணி சிறப்பாக செயல்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 20 ஓவர் போன்ற குறுகிய ஓவர் போட்டிகளில் பீல்டிங் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால், முப்பது வயதுக்கு அதிகமான வீரர்கள் அணியில் அதிகம் உள்ளதால் அந்த சீனியர் வீரர்களை எங்கெங்கு தோனி பீல்டிங்கின் போது நிறுத்த போகிறார் என்பதில் தான் அதிக சவால் காத்திருக்கிறது' என தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் அனுபவம் மிக்க சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்காதது சென்னை அணிக்கு சற்று பின்னடைவாகும்.
மற்ற செய்திகள்