Jai been others

VIDEO: பவுண்டரி லைனில் நின்ற பாகிஸ்தான் வீரர்.. ‘அப்போ ரசிகர்கள் சொன்ன வார்த்தை’.. வீடியோவை பார்த்து சிரித்த வீரரின் மனைவி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை ரசிகர்கள் மச்சான் என உறவு முறை சொல்லி குறும்பாக கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

VIDEO: பவுண்டரி லைனில் நின்ற பாகிஸ்தான் வீரர்.. ‘அப்போ ரசிகர்கள் சொன்ன வார்த்தை’.. வீடியோவை பார்த்து சிரித்த வீரரின் மனைவி..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தொடர் நேற்று முன்தினம் துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

Sania Mirza reacted fans chant Jija Ji for Shoaib Malik

இந்த நிலையில், இப்போட்டிக்கு நடுவே பீல்டிங் செய்துகொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை, இந்திய ரசிகர்கள் சிலர் ‘மச்சான்’ என உறவு முறையுடன் குறும்பாக அழைத்தனர்.

கடந்த 2010-ம் ஆண்டு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர சோயிப் மாலிக் திருமணம் செய்துகொண்டார். அதனால்தான் சோயிப் மாலிக்கை ரசிகர்கள் உறவு முறை வைத்து அழைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், சானியா மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் 2 இதய எமோஜியும், சிரிக்கும் எமோஜியும் பதிவிட்டுள்ளார்.

PAKISTAN, INDVPAK, T20WORLDCUP, SANIAMIRZA, SHOAIBMALIK

மற்ற செய்திகள்