‘என்னால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல’!.. அண்ணனுக்கு எதிராக ஐபிஎல்-ல் ஆடிய அனுபவம்.. ‘சுட்டிக்குழந்தை’ பகிர்ந்த சுவார்ஸ்யம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் தனது அண்ணன் டாம் கர்ரனுக்கு பந்து வீசிய அனுபவம் குறித்து சிஎஸ்கே வீரர் சாம் கர்ரன் பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சாம் கர்ரன், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் சாம் கர்ரன் கவனம் ஈர்த்தார். அதனால் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உண்டானது.
கடந்த சீசன் போலவே நடப்பு ஐபிஎல் தொடரிலும் சாம் கர்ரன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் சாம் கர்ரனின் அண்ணன் டாம் கர்ரன் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார்.
முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக டாம் கர்ரன் விளையாடினார். அப்போது தனது அண்ணன் டாம் கர்ரனுக்கு எதிரான விளையாடிய அனுபவம் குறித்து சிஎஸ்கே வீரர் சாம் கர்ரன் பகிர்ந்துள்ளார். அதில், ‘நாங்கள் இருவரும் சின்ன வயதில் இருந்தே பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லாவற்றிலும் போட்டிப்போட்டுக் கொண்டுதான் வளர்ந்தோம். ஐபிஎல் தொடரில் டாம் கர்ரனுக்கு எதிரான நான் விளையாடினேன். இது கொஞ்சம் நகைச்சுவையாகதான் இருந்தது. நான் அவருக்கு பவுலிங் வீசும்போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நீங்கள் சீரியஸாக இருக்க முயன்றாலும், ஒரு சில நேரம் உங்களால் அது முடியாது’ என சாம் கர்ரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அப்போட்டியில் 4 ஓவர்களை வீசிய டெல்லி அணியின் டாம் கர்ரன் 1 விக்கெட் எடுத்து 40 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். அதிலும் குறிப்பாக டாம் கர்ரன் வீசிய 19-வது ஓவரில் மட்டும் 23 ரன்கள் சென்றது. அந்த ஓவரில் சாம் கர்ரன் மட்டுமே 17 ரன்கள் ( 2 சிக்சர், 1 பவுண்டரி) அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்