அன்னைக்கி 'டிராவிட்' பக்கம் திரும்பி... "யாருங்க இந்த குழந்தை?... இப்டி அடிச்சு நொறுக்குறாருன்னு" ஆச்சரியத்துல கேட்டேன்... 'இந்திய' வீரரை புகழ்ந்த 'சாம் பில்லிங்ஸ்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அன்னைக்கி 'டிராவிட்' பக்கம் திரும்பி... "யாருங்க இந்த குழந்தை?... இப்டி அடிச்சு நொறுக்குறாருன்னு" ஆச்சரியத்துல கேட்டேன்... 'இந்திய' வீரரை புகழ்ந்த 'சாம் பில்லிங்ஸ்'!!!

இந்த இரண்டு டெஸ்ட் தொடர்களிலும், 23 வயதேயான இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலும் மிக முக்கிய பங்காற்றியிருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்த போது, மிகவும் சிறப்பாக ஆடி சதமடித்த ரிஷப் பண்ட், அணியை மீட்டெடுத்தார்.

அது மட்டுமில்லாமல், ஆண்டர்சன் வீசிய பந்தை, ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் பண்ட் பவுண்டரியாக மாற்றினார். இந்த ஷாட்டும், ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.

'நான் ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்த போது, இரண்டு ஆண்டுகள் ரிஷப் பண்ட்டுடன் ஆடியுள்ளேன். அப்போது, நான் ராகுல் டிராவிட்டிடம், 'யாருங்க இந்த குழந்தை?. நாதன் கவுன்ட்டர் நைல், கிறிஸ் மோரிஸ், ரபாடா என அனைவரின் பந்துகளையும் வலைப் பயிற்சியில் நொறுக்கி எடுக்கிறார்' என கேட்டேன். அவ்வளவு சிறப்பாக, தனது சிறு வயதிலேயே பண்ட் ஆடினார்' என ஆச்சரியத்தில் ஆழ்ந்து கூறியுள்ளார் சாம் பில்லிங்ஸ்.

முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு, எம்.எஸ். தோனிக்கு மாற்றாக ரிஷப் பண்ட் இருப்பார் என சாம் பில்லிங்ஸ் தெரிவித்திருந்த நிலையில், அவரது கருத்துக்கு அதிக விமர்சனம் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில், சாம் பில்லிங்ஸை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியிருந்தது.

மற்ற செய்திகள்