என்ன கேட்டா 'அந்த பையனுக்கு' ஒரு சான்ஸ் கொடுக்கலாம்...! கண்டிப்பா பெருசா 'சம்பவம்' பண்ணிடுவான்...! - இளம் வீரரை புகழ்ந்த முன்னாள் வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் டி-20 உலகக்கோப்பை தொடர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது.
இந்த தொடரின் முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை சந்தித்த நிலையில், அடுத்ததாக ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
அதோடு, மூன்றாவது போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதுவதால் இது இந்த கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது.
இந்நிலையில், டி-20 தொடர் ஆடவுள்ள இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பலர், தங்களது ஆலோசனையையும் வழங்குவதோடு, டி-20 உலகக்கோப்பை தொடர் குறித்தான தங்களது கருத்துக்கள் மற்றும் கணிப்புகளையும் கூறி வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் இந்திய கிரிக்கெட் அணியில் சூர்யகுமார் யாதவை நீக்கிவிட்டு அவரது இடத்தை இஷான் கிஷனிற்கு வழங்கினால் இந்திய அணிக்கு நல்லது எனக் கூறியுள்ளார்.
இது குறித்து பேட்டியளித்துள்ள சல்மான் பட், 'இந்திய அணியில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் நன்றாக ஆடினார். ஆனால், அதையடுத்து அவரின் சிறப்பான ஆட்டத்தை பார்க்க முடிவதில்லை, ஐபிஎல் தொடரில் ஓரிரு போட்டிகளை தவிர மற்ற போட்டிகளில் மிக மோசமாகவே விளையாடினார்.
இதேபோல் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சொதப்பினால் அவருக்கு பதிலாக இஷான் கிஷனிற்கு இந்திய அணி வாய்ப்பு வழங்கலாம். இப்போதைக்கு இஷான் கிஷன் மிக சிறப்பாக விளையாடி வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.
என்னை பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவா இஷான் கிஷனா என்றால் இந்திய அணியில் இஷான் இருப்பதே நல்லது. அதோடு, இந்திய அணியில் இஷான் இடம்பெற்றால் மிடில் ஆர்டருக்கு ரிஷப் பண்ட்டுடன் சேர்த்து இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் கிடைப்பார்கள். இது இடது, வலது காம்பினேஷனுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இந்திய அணியின் முதல் மூன்று வீரர்களும் வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதால் இஷான் கிஷனிற்கு இடம் கொடுப்பதே என்னை பொறுத்தவரையில் சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்