"இப்போ எதுக்கு இப்டி எல்லாம் பேசுறீங்க??.. நல்லா போயிட்டு இருக்குற நேரத்துல 'பிரச்சனை'ய கெளப்பாதீங்க!.." 'இந்திய' அணியை பற்றி வந்த 'கமெண்ட்'டால் 'பரபரப்பு'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி ஆடவுள்ளது. இந்த இரு தொடர்களுக்காக, இன்னும் சில தினங்களில் இங்கிலாந்து கிளம்பவுள்ள இந்திய அணி வீரர்கள், தற்போது இந்தியாவில் பயோ பபுள் விதிகளுக்கு உட்பட்டு தனிமையில் உள்ளனர்.
மேலும், இந்த இரு தொடர்களிலும் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரையில், சமீப காலமாக வெளிநாட்டு மைதானங்களிலும் மிகச் சிறப்பாக ஆடி வருடுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, அனுபவ வீரர்கள் சிலர் இல்லாத போதும், இளம் வீரர்களைக் கொண்டு பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாறு படைத்திருந்தது.
இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும், இந்திய அணியே வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், இந்திய அணியின் சமீப காலத்தின் வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் கோலி காரணமில்லை என்றும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (Ravi Shastri) தான் இந்த அளவுக்கு இந்திய அணியை மேம்படுத்தினார் என்றும், இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் (Monty Panesa) தெரிவித்திருந்தார்.
இப்போதைய இந்திய அணியை பார்க்கும் போது, அது கோலியின் அணியாக தெரியவில்லை என்றும், ரவி சாஸ்திரியின் அணியாகவே தெரிகிறது என்றும், பனேசர் கூறினார். மேலும், ஆஸ்திரேலிய தொடரில், கோலி இல்லாத இந்திய அணி, அவர்களை வீழ்த்தி வெற்றி பெற்றதற்கான காரணமும் ரவி சாஸ்திரி தான் என்றும் பனேசர் குறிப்ப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பனேசர் அப்படி கூறியது சரியில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் (Salman Butt) தெரிவித்துள்ளார். 'ஒருவர் ஏன் இந்த நேரத்தில், இதைச் சொல்ல வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. இந்திய அணிக்காக விராட் நிறைய ரன்கள் எடுத்துள்ளார். அதன் உதவி இல்லாமல், இப்படி ஒரு நல்ல வெற்றி விகிதத்தை இந்திய அணி பெற முடியுமா?. நிச்சயம் இல்லை. ஒரு தொடரில் கோலி இல்லை என்பதற்காக, மற்ற தொடர்களில் அவரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடக் கூடாது.
ஒரு அணியின் கேப்டன், புத்திசாலியாகவும், அணிக்காக சிறந்த முடிவுகளை எடுப்பராகவும் இருந்தால், அதனை புரிந்து கொள்ளும் பயிற்சியாளர், அதிகமான விஷயங்களில் தலையிடாமல் இருக்க முடிவு செய்வதே, அவர் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு ஆகும். இதே போல, அணியின் முன்னேற்றத்திற்காக பயிற்சியாளர் உதவி செய்தால், அதனை புரிந்து கொண்டு கேப்டன் செயல்பட வேண்டும்.
அணியின் வெற்றிக்காக, ஒருவர் போடும் திட்டங்கள், சிறந்ததாக இருந்து, அதனை அணியிலுள்ள மற்றவர்களும் ஆதரித்தால், அவர் பயிற்சியாளராகவோ, கேப்டனாகவோ, அல்லது மற்ற யாராக இருந்தாலும் பரவாயில்லை' என சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்