சும்மா சும்மா ஏன் கோலி'ய நோண்டிட்டு இருக்கீங்க.. பெரிய தப்புங்க இது.. கடுப்பான முன்னாள் வீரர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி, தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டெஸ்ட் தொடருக்கு பிறகு, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக, 3 ஒரு நாள் போட்டித் தொடரிலும் இந்திய அணி கலந்து கொள்ளவுள்ளது. இதற்கான இந்திய அணியும், சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து, கோலி நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவை புதிய கேப்டனாக பிசிசிஐ நியமித்திருந்தது.
அவரும் தற்போது காயத்தால் அவதிப்படுவதால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில், இந்திய அணியை கே எல் ராகுல் வழிநடத்தவுள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பைத் தொடருக்கு பிறகு, இந்திய கேப்டன் விராட் கோலி, அதன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.
சொந்த மகளே இப்டி செஞ்சுட்டா.. நடுரோட்டில் கொலை செய்யப்பட்ட தாய்.. அதிர வைத்த காரணம்
அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ
தொடர்ந்து, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில், சிறப்பாக தலைமை தாங்க வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், ஒரு நாள் கேப்டன் பதவியில் பொறுப்பில் இருந்து அவரை நீக்கிய பிசிசிஐ, புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமித்தது. இந்த தகவல், கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் பரபரப்பை கிளப்பியது.
மறுத்த கோலி
கோலியை டி 20 போட்டிகளில் தொடர்ந்து செயல்பட அறிவுறுத்தினோம் என்றும், ஆனால் கோலி அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், பிசிசிஐ தரப்பில் கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால், கங்குலியின் கருத்தை மறுத்த கோலி, தன்னை டி 20 கேப்டனாக தொடர்ந்து செய்லபட, பிசிசிஐ தரப்பில் யாரும் கோரிக்கை வைக்கவில்லை. ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலக்கியது கூட, கடைசி நேரத்தில் தான் தனக்கு தெரிவிக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்தார்.
மீண்டும் நொண்டிய சேத்தன் ஷர்மா
இந்திய அணிக்குள் நிலவிய இரு வேறு கருத்துக்கள், பிசிசிஐ மற்றும் கோலி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், கிரிக்கெட் அரங்கில் கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இது குறித்து, பல முன்னாள் வீரர்கள், இந்திய அணிக்குள் எந்தவித ஒளிவு மறைவு இருக்கக் கூடாது என்றும், வீரர்களிடம் அணி நிர்வாகம் தெளிவாக அனைத்து காரியங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். இந்த விவகாரம், தற்போது ஓரளவு ஓய்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் சேத்தன் ஷர்மா மீண்டும் இதுபற்றி பேசியுள்ளார்.
VIDEO: கே.எல்.ராகுல் செய்த செயல்.. ‘வார்னிங்’ கொடுத்த அம்பயர்.. ஸ்டம்ப் மைக்கில் பதிவான ஆடியோ..!
காரணம் என்ன?
தென்னாப்பிரிக்க ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்த போது பேசிய சேத்தன் ஷர்மா, 'டி 20 கேப்டனாக கோலியை தொடர வேண்டி நாங்கள் அறிவுறுத்தினோம். ஆனால், கோலி இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் ஒரே கேப்டன் இருந்தால் தான் திட்டமிட வசதியாக இருக்கும். இதனால், கோலியை ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து மாற்றினோம்' என குறிப்பிட்டார்.
கொந்தளித்த சல்மான் பட்
கோலி - பிசிசிஐ விவகாரம் ஓரளவுக்கு ஓய்ந்து வந்த நிலையில், மீண்டும் இது பற்றி சேத்தன் சர்மா பேசியுள்ளதால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் சல்மான் பட், அவரின் செயலை விமர்சனம் செய்துள்ளார். 'கோலி பற்றிய இந்த தலைப்பை தற்போது மீண்டும் பேச வேண்டிய அவசியமே இல்லை. தென்னாப்பிரிக்காவில் ஆடிக் கொண்டிருக்கும் இந்திய அணி, ஒரு டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது. தொடரைக் கைப்பற்றும் நோக்கிலும் ஆடி வருகிறது. அந்த அணியை வழிநடத்திக் கொண்டிருக்கும் கேப்டனை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்.
தேவை இல்லாத ஒன்று
தவறான கம்யூனிக்கேஷன் இருப்பது இயல்பு தான். அது பெரிய விஷயம் ஒன்றுமல்ல. அணி வெற்றி பெற்று, நல்ல ஒரு ஃபார்மில் இருக்கும் போது, இப்படி பேசுவது, தேவையில்லாத ஒன்று. முடிந்த விஷயத்தை அத்துடன் முடித்து விட வேண்டும். அதனைப் பற்றி, யாராவது கேட்டால் கூட நீங்கள் பதில் சொல்லாமல் கடந்து செல்ல வேண்டும். கோலியை பற்றி நீங்கள் இப்போது பேசியது தேவையில்லாத ஒன்று' என சல்மான் பட் விமர்சனம் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்