இந்த மாதிரி 'சேட்டைகள்' எல்லாம் கொஞ்சம் 'கம்மி' பண்ணுங்க...! நீங்க 'அவர' பார்த்தாவது கொஞ்சம் கத்துக்கலாம்...! - விராட் கோலிக்கு அறிவுரை கூறிய முன்னாள் வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி எப்படி செயல்பட வேண்டும் என்பதை குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ள கருத்து வைரலாகி வருகிறது.

இந்த மாதிரி 'சேட்டைகள்' எல்லாம் கொஞ்சம் 'கம்மி' பண்ணுங்க...! நீங்க 'அவர' பார்த்தாவது கொஞ்சம் கத்துக்கலாம்...! - விராட் கோலிக்கு அறிவுரை கூறிய முன்னாள் வீரர்...!

பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் என்பவர் சில நாட்களுக்கு முன் கேன் வில்லியம்சனை விட விராட் கோலி சிறப்பு என கூறியிருந்த நிலையில் தற்போது மக்கள் மனதில் இடம்பெற வேண்டுமெனில் பெரிய தொடர்களை வெல்ல வேண்டும் என விராட் கோலிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Salman Butt comments on how Virat Kohli should act

இதுகுறித்து கூறிய சல்மான் பட், 'விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் நல்ல கேப்டனாக இருக்கலாம், ஆனால் இதுவரை அவர் எந்த ஒரு சாம்பியன் பட்டமும் வெல்லவில்லை.

Salman Butt comments on how Virat Kohli should act

நாம் என்னதான் நம்முடைய அணியை நல்ல திட்டங்களை கொண்டு வழிவகுத்தாலும், சாம்பியன் தொடர் போன்றவற்றை வென்றால் தான் மக்கள் மனதில் இடம்பெற முடியும், இல்லையென்றால் நம்மை நினைவில் வைத்து கொள்ள மாட்டார்கள்.

Salman Butt comments on how Virat Kohli should act

கேப்டன் கூறுவதை, பவுலர் சரிவர நடைமுறைப்படுத்த முடியாமல் கூட போகலாம். ஆகவே அதிர்ஷ்டமும் வேண்டும்,  அதேபோல் ஒருவர் பெரிய கேப்டனாக இல்லாமல் இருந்தாலும், நல்ல அணி இருக்கிறது என்றால் சாம்பியன் ஆகிவிடும். விராட் கோலி ஐசிசி பட்டமோ, ஐபிஎல் சாம்பியன் பட்டமோ வெல்லவில்லை.

Salman Butt comments on how Virat Kohli should act

ஆனால் அவர் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர், அவரது உடல் மொழி ஆக்ரோஷமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் இறங்கும்போதும் 100% அணிக்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

Salman Butt comments on how Virat Kohli should act

கேப்டனாக இருப்பவர்களிடம் நுட்பம் இருக்க வேண்டும், வெறும் ஆக்ரோஷ உடல் ரீதியான அசைவுகளல்ல. டாப் கிளாஸ் கேப்டன்கள் என்பவர்கள் அழுத்தும் கணங்களில் கூலாக இருப்பார்கள். விராட் கோலி வெறும் அங்க சேஷ்டைகளை மேற்கொண்டு வருகிறார், இப்படி இருப்பவர் தொடரை வென்றிருந்தால் உலகம் அவரைப் போற்றியிருக்கும். இந்த தோல்வியில் இருந்து வில்லியம்சனிடமிருந்து நுட்பங்களை கோலி கற்க வேண்டும்' என சல்மான் பட் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்