‘டிக்கெட் எடுத்த ரசிகர்களின் நிலை என்ன?... 'லைவ் அப்டேட் கொடுத்த சாக்ஷி தோனி'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அரையிறுதிப் போட்டி ஒத்தி வைக்கப்பட்டநிலையில், அதற்காக டிக்கெட் எடுத்த ரசிகர்கள், இன்றும் அதே டிக்கெட் பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பை சாக்ஷி தோனி தனது இன்ஸ்டாகிராமில் லைவ்வாக பதிவுசெய்துள்ளார்.

‘டிக்கெட் எடுத்த ரசிகர்களின் நிலை என்ன?... 'லைவ் அப்டேட் கொடுத்த சாக்ஷி தோனி'!

உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது மழை பெய்ததால்  ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டு, ரிசர்வ் டே நாளில் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று இரு அணிகளும் விளையாட உள்ளன. எந்த இடத்தில் அவர்கள் ஆட்டத்தை கைவிட்டார்களோ அதே இடத்திலிருந்து ஆட்டத்தை தொடருவார்கள். இந்த ஆட்டம் முழுமையாக நடந்தால் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் நேற்றைய போட்டியை காண டிக்கெட் எடுத்தவர்களுக்கான நிலையை அறிந்து, நேற்றைய போட்டிக்கு டிக்கெட் எடுத்தவர்கள் அதே டிக்கெட்டை வைத்து இன்றைய போட்டியை காணலாம் என்று மைதான நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை சாக்ஷி தோனி தனது இன்ஸ்டாகிராமில் உடனடியாக லைவ் அப்டேட் செய்தார். பி.சி.சி.ஐ நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது.