Sakibul Gani | முதல் போட்டியிலேயே இப்படி ஒரு சாதனையை யாருமே செஞ்சதில்ல.. பவுலர்களை திணறடித்த சாஹிபுல் கானி ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவின் புகழ்பெற்ற ரஞ்சி கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தனது முதல் போட்டியிலேயே இளம் வீரர் ஒருவர் மூன்று சதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார். இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரம் இவர்தான் என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை கொண்டாடி வருகின்றனர்.
தன்னை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸையே ஆட்டையைப்போட்ட நபர்.. கோவையில் பரபரப்பு.!
சாஹிபுல் கானி
22 வயதான சாஹிபுல் கானி. பீஹார் அணிக்கான வீரராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், கொல்கத்தாவின் சில்வர் லேக் பகுதியில் அமைந்துள்ள ஜாதவ்ப்பூர் பல்கலைக்கழக மைதானத்தில் பீஹார் அணி மிசோரம் அணியை எதிர்த்து விளையாடியது. இதுவே கானியின் முதல் ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டியாகும்.
தனது முதல் போட்டியில் களமிறங்கிய அவர் மிசோரம் வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பந்தை நாலா பக்கமும் விரட்டிய கானி சதமடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஆனால், அவருடைய ருத்ரதாண்டவ பேட்டிங் ஓயவில்லை. அடுத்தடுத்து புது பவுலர்கள் வந்தாலும் தனது அதிரடி பேட்டிங்கை விட்டுக்கொடுக்கவில்லை கானி. இதன் பலனாக அவர் 341ரன்கள் குவித்தார்.
சாதனை
அறிமுகமான முதல் போட்டியிலேயே மூன்று சதங்களை அடித்த வீரர் என்னும் பெருமையை கானி இதன் மூலம் பெற்றார். 387 பந்துகளை சந்தித்த கானி 50 பவுண்டரிகளுடன் துணையுடன் 341 ரன்களை குவித்திருக்கிறார். நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட முதல் முச்சதம் இதுதான்.
இதே தொடரில் முன்னதாக, டெல்லி அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கிய யாஷ் துல் சதமடித்து அனைவரையும் ஆச்சர்யமூட்டினார். அதேபோல, இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அஜின்கியா ரஹானே இந்த ரஞ்சி தொடரில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து அவரும் இந்தத் தொடரில் சதத்தை விளாசியுள்ளார்.
ரெக்கார்டு பிரேக்
இதற்கு முன்னர் கடந்த 2018/19 ஆம் ஆண்டு ரஞ்சி தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கிய அஜய் ரோஹிரா 267ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவே இதுவரையில் அறிமுக போட்டியிலேயே ஒருவர் அடித்த அதிக ஸ்கோராக இருந்தது. இந்நிலையில், இந்த சாதனையை கானி முறியடித்திருக்க்கிறார்.
மற்ற செய்திகள்