"எல்லாரும் இப்டி பண்றத கண்டிப்பா ஏத்துக்க முடியாது.." 'இர்பான் பதான்' மீது உருவான 'சர்ச்சை'.. ஆவேசத்துடன் பதில் சொன்ன 'மனைவி'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் (Irfan Pathan), சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இயங்கக் கூடியவர்.

"எல்லாரும் இப்டி பண்றத கண்டிப்பா ஏத்துக்க முடியாது.." 'இர்பான் பதான்' மீது உருவான 'சர்ச்சை'.. ஆவேசத்துடன் பதில் சொன்ன 'மனைவி'!!

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தனது மகனின் இன்ஸ்டா அக்கவுண்டில், ஒரு புகைப்படம் பதிவிடப்பட்டிருந்ததால், அதிகமான விமர்சனங்களை சந்தித்திருந்தார் இர்பான் பதான். தனது மகன் மற்றும் மனைவியுடன் இர்பான் இருக்கும் புகைப்படம் ஒன்று, அதில் பகிரப்பட்டிருந்த நிலையில், மனைவியின் முகம் மங்கலாக இருந்தது.

 

இதனால், இர்பான் பதான் தான் அவரது மனைவியின் முகத்தை சமூக வலைத்தளங்களில் காட்ட அனுமதிக்கவில்லை என்றும், அவர் தனது மனைவியை கண்டிப்புடன் இருக்கச் சொல்லியிருப்பார் என்றும் பல தரப்பிலான விமர்சனங்கள், பதான் மீது எழுந்தது. இந்த சம்பவத்தால், அவரைச் சுற்றி அதிகம் சர்ச்சைகளும் உருவான நிலையில், தன் மீதான விமர்சனத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில், இர்பான் பதான் விளக்கமளித்திருந்தார்.

 

தனது மகனின் இன்ஸ்டா பக்கத்தில் இருந்த அதே புகைப்படத்தை பகிர்ந்த இர்பான் பதான், எனது மனைவியின் விருப்பப்படி தான், இந்த புகைப்படம் மங்கலாக வெளியிடப்பட்டது என்றும், நான் அவளுடைய துணை மட்டும் தானே தவிர அவளின் எஜமானன் அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தேவையே இல்லாமல், தனது கணவர் மீது எழுந்த விமர்சனம் குறித்து, சஃபா பைக் (Safa Baig) மனம் திறந்துள்ளார்.

'எனது மகனின் பெயரில் நான் தான் இன்ஸ்டா அக்கவுண்ட் ஒன்றை திறந்தேன். அதில், அதிகம் புகைப்படங்களை பதிவிடுவதால், அவன் வளர்ந்த பிறகு, இதனை பார்க்கும் போது, தனது சிறு வயதின் அழகிய நினைவுகள், அவன் முன்பு வந்து போகும் என்பதற்காக இதைச் செய்தேன். மேலும், அந்த புகைப்படத்தில், எனது முகத்தை மட்டும் மங்கலாக்கி நான் தான் பதிவிட்டேன்.

இது முற்றிலும் எனது முடிவு தான். இர்பானுக்கு இதில் எந்தவித தொடர்புமில்லை. குடும்பத்தினர்களுடன் புகைப்படங்களை பதிவிடும் போது, இப்படி ஒரு சர்ச்சை உருவாகும் என ஒரு போதும் நினைத்ததில்லை. நான் மிகவும் தனிப்பட்ட நபர். எனது புகைப்படத்தை பதிவிட்டு, அதிக கவனம் பெற வேண்டும் என எப்போதும் நினைக்க மாட்டேன்.

2021 ஆம் ஆண்டில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பதால், ஒவ்வொருவரும் தங்களிடம் இருந்து மற்றொருவர் வேறுபட்டு இருந்தால், அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆடை குறித்தானாலும், அல்லது ஒருவரின் முகத்தை காட்டுவது என்பதனாலும், அதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. அதனை விட்டுவிட்டு, இணையத்தில் அச்சுறுவது என்பதை பொறுத்துக் கொள்ள முடியாது' என சஃபா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்